புதுடில்லி, ஜூலை 28- காவிரி ஆணையத்தில் மேக தாது அணைகுறித்து விவா திக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கருநாடக அரசின் திட்டம், காவிரி நடுவர் மன்ற உத்த ரவுக்கும், உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கும் எதிரானது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து வருகிறது.
மேகதாது அணைகட்டு வது தமிழ்நாட்டின் நலனுக்குத் தீங்கு விளைவிப்பதாக அமை யும் என்றும் இந்த விவகாரம் குறித்து காவிரி ஆணையத்தில் எந்தவித விவாதமும் நடத்தக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிதாக மனு ஒன்றையும் தாக்கல் செய்தது.
இந்த மனு, கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, மேகதாது அணைகுறித்து விவாதிக்க காவிரி ஆணை யத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித் திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசா ரணைக்கு வந்தபோது, மேக தாது அணைகுறித்து விவா திக்க ஏற்கெனவே விதிக்கப் பட்ட தடை நீடிக்கும் என உத் தரவிட்ட நீதிபதிகள், விசார ணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
No comments:
Post a Comment