ஒழுக்கத்தைப் பேணும் பிஜேபியின் இலட்சணம் இது தான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 30, 2022

ஒழுக்கத்தைப் பேணும் பிஜேபியின் இலட்சணம் இது தான்!

மேகாலயா பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் மராக்கின் பண்ணை வீட்டில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டதாக பிப்ரவரி மாதம் புகார் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜூலை 22 ஆம் தேதி காவலர்கள் சோதனை நடத்தினர்.

துராவில் உள்ள தனது பண்ணை வீட்டில் விபச்சார விடுதி நடத்தி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு  தலைமறைவாக இருந்த மேகாலயா பாஜக துணைத்  தலைவர் பெர்னார்ட் மாராக்கை காவல்துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

முன்னதாக, மேகாலயா காவல்துறை பெர்னார்ட் மராக்கிற்கு எதிராக தேடுதல் அறிக்கை வெளியிட்டது அவர் கண்டுபிடிக்கப்பட்டால், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹபூர் மாவட்டத்தில் இரவு 7.15 மணியளவில் மராக் கைது செய்யப்பட்டார். "அவர் ஹபூரில் பயணம் செய்ததாக எங்களுக்கு சில வட்டாரங்கள் மூலம் தெரிய வந்தது நாங்கள் ஹபூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தோம். இதையடுத்து அவர் 30 நிமிடங்களில் கைது செய்யப்பட்டார்" என்று துரா பகுதியில் உள்ள மேற்கு கரோ ஹில்ஸின் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சிங் கூறினார்.

மேகாலயா உள்ளூர் நீதிமன்றமும் ஜூலை 19 செவ்வாய்க் கிழமை மாராக் பிணையில் வெளிவர முடியாத அளவில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது.

பெர்னார்ட் மராக்கிற்கு தொடர்பான இடத்தில்  சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட புகார் பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜூலை 22ஆம் தேதி காவல்துறையினர்  மராக்கின் பண்ணை வீட்டில் சோதனை நடத்தினர்.

ஜூலை 23 சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், அங்கே 23 பெண்கள் உள்பட 73 பேரைக் கைது செய்ததாகவும், அங்கே பல சிறுமிகள் பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டு இருப்பதைக் கண்டு அவர்களையும் மீட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

ஏற்கெனவே 1996ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பெர்னார்ட் மராக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

ஆனால் பெர்னார்ட் மராக் தனது பண்ணை வீட்டில் படிப்பதற்கு வசதியில்லாத மாணவர்களை தங்க வைத் துள்ளேன் என்று கூறியுள்ளார்

இது தொடர்பாக மாநில துணை முதலமைச்சர் பிரஸ்டோன் டைன்சோங், வெளியிட்டுள்ள செய்தியில், காவல்துறை சுதந்திரமாக செயல்பட அவரது அரசாங்கம் அனுமதிக்கிறது என்று கூறினார்.

"எந்தக் கட்சியாக இருந்தாலும், அவர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா என்பதைப் பொருட் படுத்தாமல், சட்டம் எல்லோருக்கும் பொதுவானதுதான். விரும்பத்தகாத விஷயங்கள் நடந்துள்ளன. சட்டம் அதன் போக்கில் நடவடிக்கை எடுக்க அனுமதிப்போம்" என்று டைன்சாங் கூறினார்.

சிறுமிகளை தனது கட்சி மாநில துணைத்தலைவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது அம்பலமானது தொடர்பான விவகாரத்தில் மேகாலயா மாநில பிஜேபி தலைவர் எர்னெஸ்ட் மாவ்ரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார், அதில் துராவில் உள்ள பாஜக காரியகர்த்தாக்களை காவல்துறை தேவை யில்லாமல் சட்டவிரோத காவலில் வைத்து துன்புறுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

மேலும், "எங்கள் பாஜக தொண்டர்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் செயல் - இது மிகவும் கண்டிக்கத்தக்கது. காவல் துறையின் இந்த நடவடிக்கை அனைத்து மாநில காரியகர்த்தாக்களையும் கோபப்படுத்தியுள்ளது" என்றும் எர்னெஸ்ட் மாவ்ரி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

பிஜே.பி மத்திய தலைமைக்கு இந்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன என்றும் மாநில கட்சி அலுவ லகத்தில் அவசரக் கூட்டம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சிறுமிகள் பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டது சோதனையின்போது கையும் களவுமாக பிடிபட்டும் - இந்தச் சோதனை அரசியல் பழிவாங்கல் என்று அறிக்கை வெளியிட்ட பாஜக மீது மேகாலயா மக்கள் கடுங்கோபத்தில் உள்ளனர் என்று பிடிஅய் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வெட்கக்கேட்டை எங்கே போய் சொல்லித் தொலைப்பது! சிறுமிகளை வைத்துப் பாலியல் தொழில் நடத்திய கொடூரன் பிஜேபியைச் சேர்ந்த பேர் வழி என்பதற்காக பிஜேபியின் பிரமுகர்கள் வரிந்து கட்டிக் கொண்டு, குற்றவாளிக்கு வக்காலத்து வாங்குவதுதான் - இவர்கள் கூறும் இந்து ராஜ்ஜியத்தின் இலக்கணமா? ராம ராஜ்ஜியத்தின் நாமகர்ணமா? சிந்திப்பீர்!

No comments:

Post a Comment