சென்னை, ஜூலை 2 தமிழ் நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் அமைச் சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தொற்றுப் பரவலை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள் ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா பரவல் கண்டறியப்பட் டது. அதன்பின் அந்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. பின்னர் தொற்றுக் குறைந்ததால் ஊர டங்கு கட்டுப்பாடுகள் படிப் படியாக தளர்த்தப்பட்டன. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் கரோனா 2 ஆம் அலை பரவத் தொடங்கியது. உயிரிழப்பும் அதிகரித்ததால் மீண்டும் கரோனா கட்டுப் பாடுகள் அமல்படுத்தப்பட்டு, பின்னர் செப்டம்பரில் தளர்த் தப்பட்டது.
கடந்த ஆண்டு இறுதியில் 3 ஆம் அலை வந்தது. ஆனால், அதிக பாதிப்புகள் கண்டறியப் படவில்லை. இதனால், கரோனா கட்டுப்பாடுகள் கடந்த 5 மாதங்களாக தளர்த்தப்பட்டி ருந்தன.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் இறுதியில் கரோனா தினசரி பாதிப்பு 21 என்ற அளவில் குறைந்திருந்தது. மே மாத இறுதியில் இருந்து சிறிது சிறிதாக கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. ஜூன் மத்தியில் இருந்து பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது. இதையடுத்து, கடந்த மாத இறுதியில் மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத் துறை பல்வேறு அறிவுறுத்தல் களை வழங்கியது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகிய கட்டுப் பாடுகள் கட்டாயமாக்கப்பட் டது. இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தர விட்டது.
இந்தச் சூழலில், 30.6.2022 அன்று கரோனா ஒருநாள் பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தது. நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 2,385 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு ஆயிரத்தை கடந்தது. நேற்றைய நிலவரப்படி தமிழ் நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற் பட்டவர்கள் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். 137 நாட்களுக்கு பிறகு பாதிப்பு 2 ஆயிரத்தை கடந் துள்ளது. வணிக வளாகங்கள், கடற்கரைகள், பொழுதுபோக்கு பூங்காக்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால், கரோனா பரவல் அதிகரிப்பது கண்ட றியப்பட்டுள்ளது. இதுதொடர் பாக தமிழ்நாடு அரசு அவ்வப் போது அறிவுரைகள் வழங் கியபோதும் பொதுமக்களிடம் அலட்சியம் தொடர்கிறது. இதையடுத்து, கரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
தடுப்பூசி போடாதவர் களுக்கு விரைவாக போட வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென் னை தலைமைச் செயலகத்தில் நேற்று (1.7.2022) அவசர ஆலோ சனை கூட்டம் நடந்தது. இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் வெ.இறை யன்பு, காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, மக்கள் நல்வாழ்வுச் செயலர் செந்தில் குமார், பொதுத்துறை செயலர் டி.ஜகந்நாதன், பொது மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளது குறித்து முதல மைச்சரிடம் அதிகாரிகள் விளக்கிக் கூறினர். பாதிப்புகளை குறைக்க என்னென்ன கட்டுப் பாடுகள் விதிக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 10 பேருக்கு மேல் கூடும் இடங் களில் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய் யும் வகையில் நடவடிக்கை எடுக் கும்படியும், சமூக இடை வெளியை கடைபிடிக்க அறி வுறுத்தும்படியும் அமைச்சர், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து தரப்பினரிடமும் இதை கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண் டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கரோனா பரவல் அதிகரிக்கும்பட்சத்தில், மக்க ளுக்கு அதிக அளவில் பாதிப்பு இல்லாத வகையில், கட்டுப்பாடு களை மீண்டும் அமல்படுத்த அரசு திட்ட மிட்டுள்ளதாகவும் கூறப்படு கிறது.
No comments:
Post a Comment