சென்னை, ஜூலை 13 தமிழ்நாட்டில் கடந்த மாதம் 13ஆம்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அதற்கு முன்னதாகவே வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான ஆய்வை போக்குவரத்து துறை தொடங்கியது.
இதில் குறைபாடு கண்டறியப்பட்ட வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அந்த வாகனங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: நடப்பு கல்வி ஆண்டு தொடக்கத்துக்கு முன்பாகவே, பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து முடிக்க வேண்டும். அவை முறையான தகுதிச் சான்று பெற்றுள்ளதா, விபத்து சமயங்களில் மாணவர்கள்வெளியேற அவசர வழி உள்ளதா,ஓட்டுநர் கேபின் தனியாக அமைக்கப்பட்டுள்ளதா, கதவுகளுக்கு பூட்டு உள்ளதா, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா, ஜிபிஎஸ் கருவியுடன் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இப்பணியை வட்டாரப் போக்குவரத்து, காவல், கல்வித் துறைஅதிகாரிகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான பணிகள் முடிவுற்றுள்ளன. எஞ்சிய பணிகளை முடித்து, ஜூலை 31ஆம் தேதிக்குள் அறிக்கைஅளிக்க வட்டாரப் போக்குவரத்துஅலுவலர்களை அறிவுறுத்தியுள்ளோம். ஆய்வு செய்யப்படாத வாகனங்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment