ராஞ்சி, ஜூலை.26 வீடுகளில் உள்ள காலி இடங்களில் நிழல் தரும் வகையில் மரம் வளர்ப்பவர்களுக்கு 5 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ஜார்க்கண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிராமப் புறம் மற்றும் ஊரக பகுதிகளில் மரம் வளர்க்கும் ஆர்வத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் விதமாக புதிய திட்டம் ஒன்றை மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரான் அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின்படி வீட்டின் ஒரு பகுதியில் மரம் வளர்க்கும் நபர்களுக்கு தலா 5 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட் டுள்ளது.
அதேபோல் பூச்செடிகள், கொடிகள் வளர்ப்பவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது எனவும், மரம் நன்கு வளர்ந்து நிழல் தரும் விதமாக இருந்தால் மட்டும் இந்த 5 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் 73ஆவது வன மகோத்சவ நிகழ்ச்சியின் போது இந்த அறிவிப்பை முதலமைச்சர் ஹேமந்த் சோரான் வெளியிட்டார்.
முதலமைச்சரின் அறிவிப்பு குறித்து ஜார்க்கண்ட் மாநில மின்சார துறையை சேர்ந்த உயர் அலுவலர்கள் கூறும்போது, "முதலமைச்சரின் அறிவிப்புக்கு ஏற்ற வாறு வழிகாட்டு நெறிமுறைகள் உரு வாக்கப்பட்டு, அதற்கான தொழிநுட்ப மாற்றங்கள் செய்யப்படும்" என்றனர்.
No comments:
Post a Comment