விருதுநகர், ஜூலை 13 எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு கற்றுக் கொடுத்து அனைவரும் எழுத்தறிவு பெற்றவர்கள் என்ற தமிழ்நாட்டை உருவாக்குவோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டத்தின் கீழ் அடிப்படை எழுத் தறிவு சான் றிதழ் வழங்கும் விழா மற்றும் தன்னார்வலர் களுக்கான பயிற்சி பணிமனை தொடக்க விழா, விருதுநகர் அருகே 11.7.2022 அன்று நடைபெற்றது.
ஏ.ஏ.ஏ. பொறியியல்
கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி னார்.
அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சான்றி தழ்கள் வழங்கியதுடன் பயிற்சி பணிமனையையும் தொடங்கி வைத்தனர். அப் போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசிய தாவது:-
தமிழ்நாட்டில் கல்வியும், சுகாதாரமும் இரு கண்களாக எண்ணி பணியாற்றி வரு கிறோம். முதல்-அமைச்சர் நிதி நெருக்கடி நிலையிலும் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.36 ஆயிரத்து 825 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். 1901ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக் கெடுப்பின்படி 100 பேருக்கு 5 பேர் மட்டுமே எழுத்தறிவு பெற் றவர் களாக இருந்தனர். கடந்த 2011-இல் நடந்த கணக்கெ டுப்பின்படி இந்தியாவில் 74 சதவீதம் பேர் கல்வியறிவு பெற் றிருந்தனர்.
தற்போது தமிழ்நாட்டில் 83 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
15 வயதுக்கு மேல் பள்ளி செல்ல முடியாத நபர்களுக்காக பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது.
கடந்த ஆண்டு 3 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 3 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நடப்பாண்டில் 4 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கல்வி பயிற்றுவிக்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. எனவே பயிற்சியினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு எழுத் தறிவு இல்லா தவர்களுக்கு கற்றுக் கொடுத்து அனைவரும் எழுத்தறிவு பெற்ற தமிழகத்தை உருவாக்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரன் பேசுகையில், குழந்தை களையும், வயது வந்தோரையும் கற்றோராக மாற்ற முதல்-அமைச்சர் நல்ல பல திட்டங் களை செயல்படுத்தி வருகிறார் என்றார்.
No comments:
Post a Comment