கோவையில் கொடீசியா அரங்கில் புத்தகத் திருவிழா தொடங்கியது. இந்தத் தொடக்க விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் 5000 பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூலை வழங்கினார்.
அரசு சார்பில் அச்சிட்டு வெளியிட்ட அந்த நூலின் அட்டைப் படத்தில் காவி நிறத்தில் திருவள்ளுவர் படம் இருந்தது.
‘‘ஊடகவியலாளர்கள் திருவள்ளு வருக்கு காவி நிறம் எதற்கு? தமிழ்நாடு அரசு சார்பில் உள்ள திருவள்ளுவர் படத்தை ஏன் போடவில்லை?'' என்று கேட்டதற்கு, அம்மாவட்ட ஆட்சியர் ‘‘நான் அட்டைப் படத்தைப் பார்க்க வில்லை. நூலில் உள்ளே உள்ள பல வண்ணக் கருத்துகளைத் தான் பார்த்தேன்'' என்று அசட்டையாக, கேலி தொனிக்கும் குரலில் பதில் கூறியுள்ளார்.
தலைமை 'திராவிட மாடலில்' ஆட்சி நடத்தியபோதும், பல அதிகாரிகள் இன்றும் ஹிந்துத்துவ சிந்தனையோடு செயல்பட்டு, ஹிந்துத்துவ கட்சி மற்றும் சில்லரை அமைப்பினர்களின் மனம் குளிரச் செய்யும் பிரிவினை வேலைகளைத் தானே செய்கிறார்கள்?
அதற்கு பல எடுத்துக்காட்டுகள் உண்டு. அதில் கோவை புத்தகக் காட்சியில் கொடுக்கப்பட்ட காவி நிற திருவள்ளுவர் படம் கொண்ட நூலும் ஒன்று ஆகும்.
இதற்கு யார் பொறுப்பாளி?
மாவட்ட ஆட்சியரின் பதில் நியாயந்தானா?
ஆட்சி மாறினாலும், காட்சி மாற வேண்டாமா?
No comments:
Post a Comment