தருமபுரியில் விடுதலை சந்தா திரட்டும் பணி உற்சாகமாக தொடங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 1, 2022

தருமபுரியில் விடுதலை சந்தா திரட்டும் பணி உற்சாகமாக தொடங்கியது

கழகப் புரவலர் தருமபுரிசி. ஆசைத்தம்பி-கீதா இணையர் 25 ஆண்டு  சந்தா  வழங்கினார்கள். மாவட்ட கழக அமைப்பாளர் சி.காமராசு ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் இருபது சந்தா இரசீதினை பெற்றுக்கொண்டார். பென்னாகரம் ஒன்றியத் தலைவர் கடமடை அழகேசன் ஆறுமாத சந்தா வழங்கியதுடன் பத்து சந்தா இரசீது பெற்றுக்கொண்டார். பெண்ணாகரம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.சங்கரன் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் பத்து சந்தா இரசீதை பெற்றுக் கொண்டார். பென்னாகரம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் மு.கோவிந்தராசு ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் பத்து சந்தாவுக்கான இரசீதினை பெற்றுக்கொண்டார். பொதுக்குழு உறுப்பினர் கடமடை தீர்த்தகிரி ஓராண்டு சந்தா வழங்கினார்.

கடமடை திராவிடர் கழக மகளிரணி தலைவர் தீ.சுசிலா பத்து சந்தா இரசீதினை பெற்றுக் கொண்டார் பாப்பாரப்பட்டி பொதுக்குழு உறுப்பினர் இளையமாதன்-கிருட்டினவேணி தம்பதியினர் இரண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் இருபது சந்தா இரசீதினை பெற்றுக் கொண்டார்கள். பாப்பாரப்பட்டி நகர செயலாளர் ஆசிரியர் சுந்தரம் பத்து சந்தா இரசீதினை பெற்றுக் கொண்டார். கழகப் பொதுக்குழு உறுப்பினர் பாப்பாரப்பட்டி புலவர் வேட்ராயன்  ஓராண்டு சந்தா வழங்கியதுடன் இருபது சந்தா இரசீதினை பெற்றுக்கொண்டார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அரூர்ச.இராசேந்திரன் 10 விடுதலை சந்தாக்கள் வழங்கியதுடன்  அய்ம்பது  சந்தாக்களுக்குரிய இரசீதினை பெற்றுக்கொண்டார். மேனாள்தர்மபுரிமாவட்டதிராவிடர்கழகத்தலைவர்வி. சிவாஜி 10 விடுதலைசந்தாரசீதுபெற்றுக்கொண்டார். 

மாநில அமைப்புச் செயலாளர் தருமபுரி ஊமை.செயராமன் 10 ஆண்டு சந்தா வழங்கியதுடன் இருபது இரசீது பெற்றுக் கொண்டார். அரூர் கிராம நிர்வாக அலுவலர் கட்டரசம்பட்டி  செ.தீர்த்தகிரி ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் பத்து சந்தா இரசீதினை பெற்றுக் கொண்டார். மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் பாவலர் பெரு.முல்லையரசு, மகன் முத்தமிழன் ஆகியோர் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன்  பத்து சந்தா இரசீதினை பெற்றுக் கொண்டார்கள். மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி 2 ஆண்டு சந்தா வழங்கியதுடன், இருபது சந்தா இரசீது பெற்றுக் கொண்டார்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம், எரவாஞ்சேரி வில்லியநல்லூரில் ஒன்றிய துணைத் தலைவர் மணிசேகரன், பாலகிருஷ்ணன், பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் பிளாட்டோ உள்ளிட்ட கழகத் தோழர்கள் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயகுமாரிடம் விடுதலை சந்தா புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர். (01.07.2022)

கடத்தூர் விடுதலை வாசகர் வட்ட தலைவர் கோ.தனசேகரன்- தனலட்சுமி தம்பதியினர் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் 10 சந்தா ரசீது பெற்றுக் கொண்டார்கள்.  மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கதிர்.செந்தில் ஓராண்டு விடுதலை சந்தாவழங்கியதுடன், முப்பது சந்தா இரசீதுகள் பெற்றுக் கொண்டார். பகுத்தறிவு ஆசிரியரணி மண்டல அமைப்பாளர் இரா.கிருட்டினமூர்த்தி ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் இருபது சந்தாஇரசீதுகள் பெற்றுக் கொண்டார்.  மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி துணைத்தலைவர் மு.பிரபாகரன் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் பத்து சந்தா இரசீது பெற்றுக்கொண்டார்.

விடுதலை சந்தா சேர்க்கும்பணி  திருவாரூர் மாவட்டத்தில்  உற்சாகமாக (01.07.2022) நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வீ.மோகன் தலைமையில், மாவட்டச் செயலாளர் வீர.கோவிந்தராசு, மாநில தொழிலாளரணி செயலாளர் க. வீரையன் முன்னிலையில், கொரடாச்சேரி ஒன்றியம், பருத்தியூரில் , ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், பருத்தியூர் சரவணன், செல்வராசு, நாகூரான், பவர் விசுவநாதன் உள்ளிட்ட 30 கழகத்தோழர்கள் கலந்துகொண்டனர். விடுதலை சந்தா நன்கொடை புத்தகம்  வழங்கி தோழர்களை சந்தித்து மகிழ்ந்தோம். உற்சாகம்பொங்க சந்தாக்களை திரட்டுவதாக உறுதியளித்து,   இரசீது புத்தகத்தை பெற்றுக்கொண்டனர்.

தஞ்சை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 30-06-2022 தஞ்சாவூர், பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. 200நபர்கள் 10 விடுதலை சந்தா வீதம் 2000சந்தாக்கள் தஞ்சை மாவட்டத்திற்கு தலைமைக் கழகத்தால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 30-06-2022 அன்று முதற்கட்டமாக 50 நபர்களுக்கும், உரத்தநாடு ஒன்றியத்திற்கு 50  விடுதலை சந்தா நன்கொடை புத்தகம் மற்றும் துண்டறிக்கைகளை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மண்டலத் தலைவர் மு.அய்யனார், மண்டல செயலாளர் க.குருசாமி, ஆகியேர் முன்னிலையில் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் வழங்கினார். இன்று (01-07-2022) முதல் உடனடியாக பணியை தொடங்குவதாக கழகத்தோழர்கள் மகிழ்வுடன் தெரிவித்து நன்கொடை புத்தகங்களை பெற்றுக்கொண்டனர்

கடலூர் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்க உரிய ரசீது புத்தகங்கள் வழங்கல்

கடலூர் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்க உரிய ரசீது புத்தகங்களை கழகத் தோழர்களுக்கு 30.6.2022 அன்று கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், மாவட்டத் தலைவர் தண்டபாணி ஆகியோர் வழங்கினர்.

மாவட்டத் தலைவர் வீ.மோகன் தலைமையில், மாவட்டச் செயலாளர் வீர.கோவிந்தராசு , மாநில தொழிலாளரணி செயலாளர்க. வீரையன் முன்னிலையில், கொரடாச்சேரி ஒன்றியம், கண்கொடுத்தவனிதத்தில் ஒன்றியத்தலைவர் தங்க. கலியபெருமாள், ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், கண்கொடுத்தவனிதம்பெரியாரணி விசுவநாதன், துரைராசு, வீரப்பன், ரெத்தினம், சிவா ஆகியோருக்கு விடுதலை சந்தா நன்கொடை புத்தகம்  வழங்கிதோழர்களை சந்தித்து மகிழ்ந்தோம். உற்சாகம்பொங்க சந்தாக்களை திரட்டுவதாக உறுதியளித்து, இரசீது புத்தகத்தை பெற்றுக்கொண்டனர்  (01.07.2022)

குடவாசல் ஒன்றியம், மஞ்சக்குடியில் ஒன்றியத் தலைவர், ஜெயராமன், செல்வக்குமார், அறிவுக்கரசன் உள்ளிட்ட கழகத் தோழர்களை சந்தித்து பொதுச் செயலாளர் இரா.செயக்குமாரிடம்  விடுதலை சந்தா நன்கொடை புத்தகம் வழங்கினர்.. உற்சாகம் பொங்க சந்தாக்களை திரட்டுவதாக உறுதியளித்து, இரசீது புத்தகத்தை பெற்றுக் கொண்டனர். (01.07.2022)


No comments:

Post a Comment