பார்ப்பான் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டியோ!
* ஆடி அமாவாசையையொட்டி மறைந்து போன முன்னோருக்குத் தர்ப்பணம்.
>> அவர்கள்தான் செத்துச் சுண்ணாம்பாகி விட்டார் களே! உயிரோடு இருப்பவர்களுக்கு உதவுங்கள்!
கடவுளை மற, மனிதனை நினை!
* சென்னை மண்டலத்தில் கோவில் பணியாளர் குறைதீர் கூட்டம்.
>> அவர்களுக்குத் தெரியும் - கோவிலில் உள்ள கடவுளால் பயனில்லை - அரசுதான் குறை தீர்க்கும் ஆசான்!
ரொம்பவே முக்கியத்துவம்தான்
* ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு.
>> ராமனும் பொய் - ராமன் பாலமும் பொய் - வெறும் மணல் திட்டே!
தடை செய்யவேண்டாமா?
* குழந்தை வரம்: மண் சோறு சாப்பிட்டு வழிபாடு.
>> அய்யோ, கசமாலம்! அந்த மண்ணில் எத்தனை எத்தனைக் கிருமிகளோ!
No comments:
Post a Comment