வேளாண்துறையில் புத்தாக்க விருதுக்கான விண்ணப்பங்கள்வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 28, 2022

வேளாண்துறையில் புத்தாக்க விருதுக்கான விண்ணப்பங்கள்வரவேற்பு

சென்னை, ஜூலை 28  இந்தியாவில் முதன்முறையாக, செயற்கை நுண்ணறிவு ஆற்றலின் மூலம் விவசாயிகளுக்கு நிகழ்நேர ஆலோசனை வழங்கப்படும் அவுட்குரோ செயல்தளத்தை சமீபத்தில் தொடங்கி யிருக்கும் வேகூல் ஃபுட்ஸ், அவுட்குரோ கிசான் பிரகதி விருதுகள் திட்டம் விவசாயிகளுக்காக தொடங்கப் படுவதை  அறிவித்திருக்கிறது. 

விவசாயிகள் மேற்கொள்கின்ற இயற்கையான மற்றும் மறுஉருவாக்கத் திறனுள்ள விவசாயப் பணி களையும், அவற்றில் புத்தாக் கங்களையும் அங்கீகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.  

தமிழ்நாடு, கருநாடகா, தெலங்கானா, ஆந்திர பிரதேஷ் மற்றும் மஹாராட்டிரா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து இவ் விருதுக்கான விண்ணப்பங் களை வேகூல் வரவேற்கிறது.  

விவசாயத் துறையில் தொழில்நுட்பத்தால் முன் னெடுக்கப் படும் புத்தாக்க நடவடிக்கைகளை அடை யாளம் கண்டு அவைகளை பலரும் அறியுமாறு பிரபலப் படுத்துவது இந்த விருது திட்டத்தின் குறிக்கோளாகும். அத்துடன், விவசாயிகள் மேற்கொள்ளும் புதுமையான, சிறப்பான வேளாண் நடைமுறைகளை பிற 

விவசாயிகளும் அறியுமாறு காட்சிப்படுத்துவதற்கான ஒரு தளமாகவும் இது இருக்கும் என அவுட்குரோ செயல்தளம் மற்றும் விவசாயிகள் பங்கேற்பு பிரிவின் தலைவர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த விருதுகள் குறித்த அதிக தகவல்களைப் பெற  9150095207 எண்ணிற்கு அழைப்புகளை நீங்கள் செய் யலாம் மற்றும் விருதுக்கான விண்ணப்பங்களை வாட்ஸ் அப் வழியாக நீங்கள் அனுப்பலாம்.  விண்ணப்பங்களை / பரிந்துரைகளை அனுப்புவதற்கான இறுதி தேதி ஆகஸ்ட் 5  மற்றும்  ஆகஸ்ட் 25 அன்று இப்போட்டியில் வெற்றிவாகை சூடிய நபர்கள் பற்றிய அறிவிப்புகள் வெளிடப்படும்.


No comments:

Post a Comment