திராவிடர் கழக இளைஞரணி சார்பில் வரும் ஜூலை 30 ஆம் தேதி அன்று இளைஞரணி மாநில மாநாடு மிகுந்த எழுச்சியோடு நடைபெறவுள்ளது.
கொள்கையா? மானமா? உயிரா? என்ற கேள்வி அவர்களை நோக்கி எழுப்பப்பட்டால், ‘கொள்கையே' என்று ‘பட்'டென்று பதில் கூறும் பக்குவம் பெற்றவர்களே கழக இளைஞர்கள் என்ற செயல் வீரர், வீராங்கனைகள் - ‘செய்வோம் - அதற்காக செத்து மடிவோம்' என்று சூளுரைத்துத் திரள இருக்கும் எம் அருந்தோழர்காள்! அரிய லூர் மட்டுமல்ல, அகிலமே அதிசியக்கத்தக்க வண்ணம் அம்மாநாடு அமைய அனைவரும் திரண்டு - கடலைக் காணா அரியலூரில், கருஞ்சட்டைக் கடலைக் காட்டுங்கள்; பெரியார் என்ற பேராயுதத்தின் வலிமையை விளக்கும் வாலிபர்கள் கூட்டம் இதோ என்று மாற்றார், மருள, புரிய வைக்க வாருங்கள், சந்திப்போம் என தமிழர் தலைவர் அவர்கள் அழைத்து விட்டார்; தலைவரின் ஆணையை ஏற்று அரிய லூர் மாநாட்டிற்கு கோவை மாவட்டத்தில் இருந்து தனிப் பேருந்திலும், திருப்பூர் மாவட்டதில் இருந்து தனிப் பேருந்திலும்,மேட்டுப்பாளையம் மாவட்டத்தில் இருந்து தனி வாகனத்திலும், நீலமலை மாவட்டதில் இருந்து தனி வாகனத்திலும், தாராபுரம் மாவட்டத்தில் இருந்து மினி பேருந்து என அரியலூர் மாநாட்டில் பங்கேற்க கோவை மண்ட லத்தில் இருந்து இளைஞரணி - மாணவர் கழக தோழர்கள், ஆயத்தமாகிவிட்டனர்.
தோழமையுடன்,
ஆ.பிரபாகரன், மாநில இளைஞரணி அமைப்பாளர்
மு.இராகுலன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்
ஆ.முனீஸ்வரன், மண்டல இளைஞரணி செயலாளர்
வெ.யாழினி, மண்டல மாணவர் கழக செயலாளர்
No comments:
Post a Comment