கழகச் செயல் வீரர்களும், வீராங்கனை களும் களத்தில் இறங்கி, முழு மூச்சாக, தங்களது செயல் திறனைக் காட்டவேண்டிய அவசிய தருணம் இது!
ஆம்; ‘விடுதலை' வரலாற்றில் உங்களது அயராத உழைப்பும், தளராத முயற்சிகளும், நிச்சயம் வெற்றி வாகை சூடும் என்பது உறுதி! உறுதி!!
‘‘நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது;
வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!''
- இவை சூளுரைகளா? சோர்விலா சாதனைகளுக்கான முன்னுரிமை தோழர்களே!
இந்தத் திருப்பு முனையில் உங்கள் பங்களிப்பை - உழைப்பை - சந்தாக்களின் அளவுப் பெருக்கத்தின்மூலமே காட்டிட இப்போது கிட்டியுள்ள அரிய சந்தர்ப்பம்.
இதனை செயல் மலர்களாக்கிக் காட்ட - சேதாரம் இன்றி இலக்கை எட்ட, மற்ற பணிகளை ஒதுக்கி வையுங்கள்!
‘‘வீடுதோறும் ‘விடுதலை'!'' -
இதுவே நம் திருப்பு முனைப் பணி!
திக்கெட்டும் செல்லுங்கள் - வெட்கப்படா தீர்கள்!
விரைந்து செயலாற்றுங்கள்!
10,000 பேர் 6 சந்தா - இலக்கு
முடித்துவிட முடியாதா?
இனமான இன்ஜெக்ஷனை - ஊசியை தினமும் செலுத்தவே ‘‘வீடுதோறும் விடுதலை'' தேவை - ‘திராவிட மாடல்' ஆட்சியின் மாட்சியைச் சொல்வோம்!
ஜாதி, மூடநம்பிக்கையற்ற புது உலகை நிறுவவும் ‘விடுதலை' மக்கள் ஏடாக மலர்ந் தால், நாடு பெரிதும் பயன் அடையும்!
ஓய்வின்றி உழையுங்கள்!
வெற்றி உமதே!
கி,வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
28.7.2022
No comments:
Post a Comment