இராணிப்பேட்டை அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உணர்ச்சிப் பேருரை!
இராணிப்பேட்டை, ஜூலை 1 ‘ஸ்டாலின் விளம்பரப்பிரியராக இருக்கிறார்' அப்படி என்று சொல்லியிருக்கார். எனக்கு எதற்கு விளம்பரம்? இனிமேலும் எனக்கு விளம்பரம் தேவையா? 55ஆண்டுகளாக அரசியலில் இருக்கக் கூடியவன் நான். இனிமேல்எனக்கு விளம்பரம் எதற்கு? நரிக்குறவர் வீட்டுக்குப் போனார் -இருளர் வீட்டுக்குப் போனார் -அங்கே போய் அவர்கள் வீட்டில்சாப்பிட்டார் -என்றெல்லாம் வரும் செய்திகளை வைத்து அப்படி சொல்கிறார்கள், நான் கேட்கிறேன் அவர்களைபார்த்து நான் கேட்க விரும்புகிறேன்.அந்த ஒரு சந்திப் புக்குப் பின்னால் எத்தனை நலத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் முதலில் அறிந் திருக்க வேண்டும்.
நரிக்குறவர் - இருளர் வீட்டுக்குச் சென்றது இது நமது அரசு என்ற நம்பிக்கையை விதைக்கத்தான்! நரிக்குறவர் வீட்டுக்கும், இருளர் வீட்டுக்கும் சென்றதன் மூலமாக, இது நமது அரசு’ என்ற நம்பிக்கையை, அவர்கள் மனதில் ஆழமாக நாம் விதைத்திருக்கிறோம்!
அதுதான் முக்கி யமானது! ஏதோஒரு நாள் அவர்களது வீட்டுக் குச்சென்றதன் மூலமாக எனது கடமை முடிந்துவிட்டதாக நான் நினைத்து, அத்துடன் நான் சும்மா இருந்து விட்டேனா?
இதே ராணிப்பேட்டையில், சட்ட மன்றத் தேர்தலுக்கு முன்னதாக,‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’என்ற தலைப் பில், நடைபெற்றநிகழ்ச்சியில் உங்களை எல்லாம்வந்து சந்தித்தேன். மனுக் களைப் பெற்றேன். அனைவரது கோரிக்கையையும் கேட்பதற்காக அன்றைக்கு வந்தேன். பலர் எனது கையில் மனுக்களை கொடுத்தீர்கள். அதில் சில பேர்களை நான்பேச வைத் தேன். அப்போது சிலநரிக் குறவர்கள் பெண்கள், அதிலும் குறிப்பாக சில பெண்கள் மேடைக்குபக்கத்தில் வந்து, நாங்களும் பேசவேண்டுமென்று கேட் டார்கள். பேசவைத்தோம். அவர்கள் கோரிக்கையைக் கவனமாகக் கேட்டேன். ஆட்சிக்கு வந்ததும் அதை யெல்லாம் மறந்து விடவில்லைஎன்பதன் அடையாளமாகத்தான்,தற்போது பல்வேறு திட்டங்களைச்செய்து கொடுத்தும் வருகிறோம்.இன்றைக்கு 293 நரிக்குறவர்இன மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.இந்த ராணிப்பேட்டை விழாவிலேயே இரு ளர் பழங்குடியினர்மக்களுக்கு அரசின் அனைத்துநலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டிருக்கிறது.
குடும்ப அட்டை, இலவச வீட்டு மனைப் பட்டா, வீடு ஒதுக்கீடு ஆணை, முதியோர் உதவித்தொகை, முதலமைச் சரின் விரிவான, மருத்துவக் காப்பீட்டு அட்டை, வாக்களார் அடையாள அட்டை, ஜாதிச் சான்றிதழ்,மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்ட அட்டை, சேமிப்பு வங்கிக் கணக்கு நல வாரிய அட்டைகள் ஆகிய வற்றை வழங்கி, விளிம்புநிலை மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்திருக் கிறோம். விளிம்பு நிலை மக்கள் மகிழபல நலஉதவிகளைச் செய்கிறோம்!இன்று நலத்திட்ட உதவிகள்பெறக்கூடிய நபர் களில், 5,767 பேர்இருளர் இன மக்கள். இந்த மாவட்டத்தில் உள்ள 9 ஆயிரத்து 600இருளர் பழங்குடியின மக்களில், 5,767 இருளர் பழங்குடியினர் இனமக் களுக்கு இன்றைய தினம் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படவிருக்கிறது. அதேபோல் திருநங்கையர் 20பேருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட விருக்கிறது. 9,522 மாற்றுத் திறனாளி களுக்கு 15 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் செய்யப்படவிருக்கிறது. 101 மாற்றுத் திறனாளி மற்றும்சிறப்புக் குழந்தை களின் தாய்மார்களுக்கு மின்மோட் டாரு டன் கூடிய இலவசத் தையல் இயந்திரங்கள் வழங்கி, அவர்கள் மூலமாக, குறைந்த விலையில் மஞ்சள் பைகள் தயாரித்து விநியோகத்திட, நடவடிக்கை மேற் கொள்ளப்பட விருக்கிறது.
இந்த அரசாங்கத்தினுடையஇதயம் என்பது இத்தகைய விளிம்புநிலை மக்களின் மகிழ்ச்சியில் தான்இருக்கிறது. பழங்குடியின மக்களுக்கு ஒரு அடை யாள அட்டைகொடுப்பதும், பல்லாயிரம் கோடிரூபாய் மதிப்பிலான திட் டங்களை உருவாக்குவதற்கு இணை யானது! இவை விளம்பரத்துக்காகச் செய்யப்படுவது அல்ல. பிள்ளை களுக்குக் கொடுக்கும்புத்தகப் பைகளில், கடந்த ஆட்சியைப் போல, முதலமைச்ச ரான நான்எனது படத்தை போட்டுக் கொண்டுஇருந்தால், அதை விளம்பரம் என்றுசொல்லலாம். கழக ஆட்சி கடந்த ஆண்டு பொறுப்புக்கு வந்த போது, நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.பள்ளிக்கல்வித் துறை சார்பில்,கடந்த ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சர்களின் படத்தை அச்சிட் டுத் தயாரிக்கப்பட்ட பைகள்இன்னமும் மீதம் இருக்கிறது.அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று அமைச்சர்கள், அதிகாரிகள் என்னிடத்தில் வந்து சொன்னார்கள். நான் உடனே சொன்னேன். அதைப் பயன்படுத்தாமல் போனால், 17 கோடி ரூபாய் அரசுக்கு வீண் இழப்பீடு ஏற்படும், செலவு ஏற்படும், பணம் வீணாகும், “பரவாயில்லை, மேனாள் முதலமைச்சர்கள் படமேஇருக்கட்டும்" என்று சொல்லி. அந்தப் பைகளைக் கொடுக்கச் சொன் னவன் தான் இந்த ஸ்டாலின்என்பதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். விளம் பரங்கள் எனக்குத் தேவையில்லை. ஏற்கெனவே கிடைத்த புகழையும் பெருமையையும் காலமெல்லாம் கரை யாமல் காப்பாற்றினால் போதும் என்று நினைப்பவன் நான்.-
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
No comments:
Post a Comment