அரசமைப்புச் சட்டத்துக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் பதில் சொல்லும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா காட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 3, 2022

அரசமைப்புச் சட்டத்துக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் பதில் சொல்லும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா காட்டம்

புதுடில்லி, ஜூலை 3  அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேசியதாவது: 

இந்தியா 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடுகிறது. இந் தியா குடியரசு ஆகி 72 ஆண்டுகள் ஆகின்றன. அப்படியிருந்தும் அர சமைப்பின்படி ஒவ்வொரு அமைப் புக்கும் வழங்கப்பட்ட பணிகள் குறித்து நாம் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை.

ஆட்சியில் இருக்கும் கட்சிகள் அரசின் ஒவ்வொரு செயல்பாட்டுக் கும் நீதி அமைப்புகளின் ஒப்புதலை பெற வேண்டியது தங்களின் உரிமை என நினைக்கின்றன. ஆனால், எதிர்க்கட்சிகளோ தங்கள் நலனை யும் அரசியல் செல்வாக்கையும் விரிவுபடுத்துவதற்காகவும் நீதிமன்றங்கள் பயன்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றன. அரச மைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக அமைப்புகள் குறித்து மக்களிடமும் போதுமான புரிதல் இல்லை. பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாததை பயன் படுத்தியே, இதுபோன்ற சக்திகள் சுதந்திரமான அமைப்பான நீதித்துறையை கீழே தள்ளிவிட வேண்டும் என்று நினைக்கின்றன. நீதிமன்றங்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு மட்டுமே பதிலளிக்க கடமைப்பட்டு உள்ளன.

‘‘பல தரப்பட்ட மக்களை வரவேற்பதாலும், அவர்களை ஊக் குவிப்பதாலும் அமெரிக்காவுக்கு ஏராளமான இந்தியர்கள் வருகின் றனர். மக்களின் சகிப்புத்தன்மை மற்றும் உள்ளடக்கிய சிறப்பியல் புகளால் உலகம் முழுவதிலும்  இருந்து திறன் வாய்ந்தவர்கள் வருகிறார்கள். இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்று கிறார்கள். அனைவரையும் உள் ளடக்கிய கொள்கை பன்னாட்டு அளவிலானது. இதை இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் பின்பற்ற  வேண்டும்’’ என்றார்.

No comments:

Post a Comment