ஆரியத்தை வேரறுக்க அணிவகுப்போம் அரியலூரில்... - க.சிந்தனைச் செல்வன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 28, 2022

ஆரியத்தை வேரறுக்க அணிவகுப்போம் அரியலூரில்... - க.சிந்தனைச் செல்வன்

சமூகத்தில் சூத்திரர்களாகவும், பொருளா தாரத்தில் ஏழைகளாகவும், அரசியலில் அடி மைகளாகவும், உள்ள திராவிடர் சமுதா யத்தை திருத்தி மானமும் அறிவுமுள்ள மக்களாக மாற்ற,வாழ்நாளின் இறுதிவரை பாடுபட்ட மகத்தான தலைவர் பெரியார்.

நாம் பெற்றிருக்கும் உரிமைகள் கட வுள்களின் கடைக்கண் பார்வையால் கிடைத்தது அல்ல... மகான்களால், மகரிஷி களால் அருளப்பட்டவை அல்ல... தலைவர் தந்தை பெரியாரின் தன்னல மறுப்பால்.. தளராத உழைப்பால்... கிடைத்தவை.

சுயமரியாதை

"உலகத்தில் உள்ள எந்த அகராதியை புரட்டிப் பார்த்தாலும் ."சுயமரியாதை"என்ற சொல்லுக்கு ஈடானதாகவோ மேலானதா கவோ ஒரு சொல் கிடையாது என்ற தலைவர் பெரியார் நமக்கு சூடு சொர ணையை ஏற்படுத்தினார்.

வெட்கத்தையும் ரோஷத்தையும் ஏற்படுத்தவே என் இயக்கம் பாடுபடும் என்றார்.

"நான் ஒரு எதிர் நீச்சல் காரன் என்ன காரணத்தாலோ நம் நாட்டு மக்களின் பெரும்பான்மையான அபிப்பிராயத்துக்கு நான் மாறுபட்டவனாக இருந்து வருகிறேன் பழமையை பாராட்டுவது நமது மக்களுக்கு ஒரு பெருமையாய் காணப்படுகிறது .நானோபழமைப் பித்தை வெறுக்கிறவனாக இருக்கிறேன் அதனாலேயே நான் வெகு பேர்களால் வெறுக்கப்படுகிறேன் ஆனா லும் அறிவாளிகள் சீக்கிரம் என் பக்கம் திரும்பி விடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது". என்றார் தந்தை பெரியார் .

பெரியார் ஆணையிட்டால்...

ஆம் அறிவாசான் நம்பிக்கை வீண் போகவில்லை ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் அவர் பின்னால் அணிவகுக்கத் தொடங்கினர்.

தந்தை பெரியார் தலைமையில் எப் படிப்பட்ட இளைஞர்கள் எண்ணிப் பார்த் தால் வியப்படைகிறோம்... பெரியார் ஆணையிட்டால்... எதையும் செய்ய தயா ரான இளைஞர்கள்.. சட்டப்படி செல்லாது என்று தெரிந்தும் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட இளைஞர்கள்.. ஜாதியை ஒழிக்க - சட்டத்தை எரிக்கச் சொன்னால் எரித்த கூட்டம்,

பிள்ளையார் பொம்மையை உடைக்க சொன்னால் உடைத்தெறிந்த கூட்டம், ஆணையிட்டால் அக்கிரமகாரத்தை கொளுத்துவதற்கு தயாரான கூட்டம்... பிராமணாள் பெயர் அழித்த கூட்டம்...

பூணூல் உயர் ஜாதியின் சின்னம் என்றால் அதை அறுக்க தயார் தயார் என்று ஆர்ப்பரித்த கூட்டம்..இளைஞர்கள் கூட்டம் தந்தை பெரியாரின் சுட்டு விரல் திசையில் எட்டுத்திக்கும் பாய்ந்தனர் எழுச்சி ஏற்பட்டது. எண்ணற்ற மாற்றங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்தது. மறுக்கப்பட்ட கல்வி உரிமை வகுப்புரிமை வேலை வாய்ப்பு பெண்ணுரிமை எல்லாம் நம் மக்கள் வச மாகியது.

களமாடும் தலைவர் வீரமணி

பெரியார் மறைந்தார் ஆரியம் அக மகிழ்ந்தது தந்தை பெரியாருக்கு பின் திராவிடர் கழகம் இருக்காது இயங்காது அழிந்துவிடும் ஒழிந்து விடும்.. என்று கனவு கண்டது. அந்தக் கனவினை கலைத்தவர் தமிழர் தலைவர் வீரமணி. தமிழா இன உணர்வு கொள் என்றார். வகுப்புரிமைக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் வாதாடி- போராடி உரிமை மீட்டார்.தந்தை பெரியார் தத்துவத்தை அகிலம் முழுவதும் பரப்பி பாதுகாத்து வரும் தலைவர் வீரமணி..பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற இவரின் போராட்டம் ஆரியத்தின் அடிவயிற்றைக் கலக்கியது. 

பெரியாரைப் பார்க்காத இளைஞர்கள் இன்றைக்கு அவர் தத்துவத்தை உயர்த்திப் பிடிக்க காரணமானவர் ஆசிரியர் வீரமணி. காவிகளைத் தமிழ் மண்ணில் கால்பதிக்கா வண்ணம் களமாடும் தலைவர் வீரமணி ..

உரிமை பறிப்பு

நாம் போராடி பெற்ற உரிமைகளை மத்திய ஆட்சி அதிகாரத்தின் மூலமாக சனாதன சக்திகள் இன்று பறித்துக் கொண் டிருக்கின்றன .புதிய கல்விக் கொள்கையாம்.. நீட் தேர்வாம் - க்யூட் தேர்வாம்... மாண வர்களின் கல்வி உரிமை பறிக்கப்படுகிறது இளைஞர்களின் வேலைவாய்ப்பு மறுக்கப் படுகிறது அறிவியலை அழித்து அஞ்ஞானத்தை பரப்புகிறது மதவெறி தூண் டப்பட்டு மாந்தநேயம் அழிக்கப்படுகிறது.. ஜாதி வெறி தூண்டப்படுகிறது சனாதனம் உயர்த்திப் பிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு பெரியார் மண் இல்லையாம்.. காவிகள் கொக்கரிக்கின்றனர்.தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீருமாம். அகங்காரத்தோடு அமித்ஷாக்கள் கூக்குரலிடுகின்றனர். திரா விடத்தை அழிக்க - ஒழிக்க ஆளுநர்கள் அனுப்பப்படுகின்றனர். இதற்கெல்லாம் முடிவு கட்ட நாம் எடுக்க வேண்டியது பெரியாரின் கைத்தடி ....

நாம் கூட வேண்டிய இடம் அரியலூர். தோளிலே துண்டு போட வைத்த இயக்கம் அழைக்கிறது காலிலே செருப்பு போட வைத்த இயக்கம் அழைக்கிறது.

பள்ளன் பட்டம் போகாமல் பறையன் பட்டம் போகாமல் சூத்திர பட்டம் போகாது என்ற பெரியார் அழைக்கிறார்! ஆணுக் குள்ள உரிமைகள் அனைத்தும் பெண்க ளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்ற பெரியார் அழைக்கிறார்... கடவுளை மறுத்த பெரியார் ஜாதி பெருமையை

ஒழித்த - அடித்தளத்தை ஆட்டங்காண வைத்த பெரியார் அழைக்கிறார். மதங்களை மாய்த்த பெண்ணடிமை ஒழித்த ...

சமத்துவ தலைவன் ஆரியத்தை வேரறுத்த அய்யா பெரியார் அழைக்கிறார். 

என் உயிரினும் இனிய கொள்கை

"என் பிறவி காரணமாக என் இன இழிவுக்கு காரணமாக இருக்கும் ஜாதியை ஒழிப்பதும் தமிழ்நாட்டை பார்ப்பன பனியா அடிமை தளையிலிருந்தும் சுரண்டலிலி ருந்தும் மீட்டு சுதந்திரமாக வாழ வழி செய் வதுமான தமிழ்நாடு பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கையாகும்"

என்ற பெரியார் அழைக்கிறார்... பெரியா ரின் மறுவடிவமாய்-தந்தையின் பணி முடிக்க தமிழர் தலைவர் வீரமணி அழைக் கிறார். 9 வயது சிறுவனாக தமிழ்நாட்டில் முழக்கமிட்ட சிறுவன் வீரமணி இன்று 90 வயது தலைவனாக முழுக்கமிட விருக்கிறார். அலை அலையாய் அரியலூருக்கு வாருங் கள்... வரவேற்க காத்திருக்கிறோம். 

எழுச்சிமிகு இளைஞர்களே! 

பணி முடிப்போம்.. பகை வெல்வோம்.

No comments:

Post a Comment