செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 28, 2022

செய்தியும், சிந்தனையும்....!

அசல் நாத்திக செயல்!

* உ..பி.யில் கன்வர் யாத்திரை செல்வோருக்குப் பாதுகாப்புக்காகப் பக்தர்கள்போல் போலீசார் உடன் செல்லுகின்றனர்.

>> கடவுள் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை இல்லையோ!

பகுத்தறிவு கசக்கிறதா?

* ஆணின் பகுத்தறிவு சிந்தனையை பெண் மீதான காமம் குருடாக்கும்.

- உயர்நீதிமன்ற நீதிபதிகள் 

பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா

>> கடவுள் இந்திரனே கவுதமர் உருவ மெடுத்து அகலிகையை புணர்ந்தது ஆன்மிக சிந்தனையா? பகுத்தறிவுச் சிந்தனையா?

எஸ்கேப்பிசம்!

* சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்கள் சேமித்து வைத்துள்ள பணம் முழுவதும் கருப்புப்  பணம் அல்ல.                            

- ஒன்றிய நிதியமைச்சர்

>> வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி யுள்ள பணத்தை மீட்போம் என்றாரே மோடி - அதிலிருந்து எஸ்கேப்பா?

அவரது ரிஷிமூலம்

* பா.ஜ.க. வளர்வது எங்களுக்கு மகிழ்ச்சியே!

- ம.பா.பாண்டியராஜன்

>> அவரது ரிஷிமூலம் பா.ஜ.க.

தானே!


No comments:

Post a Comment