ஆவடி, ஜூலை 3 ஆவடி மாவட்ட இளைஞரணி சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் மதுரையில் நடைபெற்ற பொதுக் குழுவின் தீர்மானங்களை வழி மொழிந்து தீர்மானங்கள் ஒருமன தாக நிறைவேற்றப்பட்டது.
மதுரையில் பொதுக்குழு 25-.06.-2022 சனிக்கிழமை நடைபெற்றது. அதற்கு அடுத்த நாளே அதாவது 26.-06-.2022 ஞாயிறு அன்று ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆவடி பெரியார் மாளிகையில் காலை 10 மணியளவில், மாவட்ட இளைஞரணித் தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் கலந் துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் பா. தென் னரசு, செயலாளர் க.இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஏற்றும் இணைப்புரை வழங்கியும் நிகழ்ச்சியை வெ.கார் வேந்தன் அருமையாக ஒருங் கிணைப்பு செய்தார். நிகழ்ச்சியில் பேசிய ஒவ்வொருவரும் விடுதலை சந்தா சேர்ப்பது குறித்தும், அரியலூர் மாநாட்டிற்கு செல்வதற்கான ஆலோசனைகளையும் எடுத்து வைத்தனர்.
முத்தான மூன்று தீர்மானங்கள்!
அனைவரின் கருத்துகளையும் கேட்டபிறகு, அதிகமான அளவுக்கு விடுதலை சந்தாக்களை சேர்ப்பது என்றும், அரியலூர் மாநாட்டுக்கு 100 தோழர்களுக்கு மேல் செல்வது என்றும், பட்டாபிராம் வேல்முருகன் மாவட்டத்தின் துணைத் தலைவ ராக தேர்வு செய்யப்படுகிறார் என்றும் மூன்று தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டாபிராம் வேல்முருகன் தனது பணிகளை மாவட்டக் கழகம் அங்கீகரித்ததற்கும், கலந்துரையாடல் நிகழ்விற்கும் நன்றி தெரிவித்து நிகழ்வை நிறைவு செய்தார்.
பங்கேற்றோர்
நிகழ்வில் பூவை இளைஞர் அணி பொறுப்பாளர் சு. வெங்கடேசன், செ.அன்புச்செல்வி, துணைச் செயலாளர் பூவை க. தமிழ்ச்செல்வன், சி.வச்சிரவேலு, ரா.ரமேஷ், செ.அன்புச் செல்வி, வி.சோபன்பாபு, அம்பத்தூர் பகுதித் தலைவர் பூ.இராமலிங்கம், அம்பத்தூர் தங்க சரவணன், மதுரவாயில் சரவணன், சி,காமாட்சி, பெரியார் பிஞ்சுகள் கா.ச.அறிவழகி, கா.ச.அன்பழகன், மாவட்ட இளைஞரணிச் செய லாளர் எ.கண்ணன், பூவை கார்த்தி கேயன், பகுத்தறிவாளர் கழக செய லாளர் முருகேசன், பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் கார்த்தி கேயன், மதுரவாயில் பகுதித் தலைவர் சு.வேல்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment