கி.வீரமணி, ஆசிரியர், ‘விடுதலை’
நமது ‘விடுதலை’ நாளேடு, நமது ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் - அவ்வுரிமைகளைப் பெறவும், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலையாகி, பகுத்தறிவின் பயன்பாட்டால் உலகில் போற்றத்தக்க சமுதாயமாக ஆக வேண்டும் என்பதற்காகவும், எத்த னையோ லட்சம் ரூபாய்கள், பொருள் இழப்பானாலும் கூட, சமுதாயத்திற்கும், மக்களுக்கும் அறிவிலும், மனத் திலும் லாபம் என்பதால், 88 ஆண்டுகள் எதிர்நீச்சல் போட்டு நடைபெற்றுவரும் ஓர் அதிசய நாளேடு!
ஒரு இலட்சிய, கொள்கை நாளேடு - சமூகப் புரட்சிக்கான கருத்தியல் போருக்கான பயணத்தில், இது காகிதம் அல்ல - ஆயுதம் - அறிவாயுதம் என்று உணர்த்தும் வகையில் அது சந்தித்துள்ள எதிர்ப்புகளை, அரசின் அடக்குமுறை காரணமாக விழுப்புண்களையும் ஏற்று வீறுநடை போட்டு வந்துள்ள வரலாற்றுச் சுவடுகளைப் படித்துப் பாருங்கள். அதன் அறிவுப் புரட்சி, அமைதிப் புரட்சி எப்படிப்பட்ட ‘‘விலை’’ கொடுத்து வளர்ந்து வந்திருக்கிறது என்பது புரியும்.
விளையாட்டுக்காக அல்ல இந்த வீர நாளேடு -
வினையாற்றி சமூகத்தை மாற்றுவதற்காகவே!
அனைவரும் சமம், சமத்துவ, சம வாய்ப்பே அதன் இலக்கு; சமூகநீதி - அதனை அடைய வழி மானமும், அறிவும் பெற்ற மனிதர்களாக மக்களை உருவாக்குதல் என்பதே அதன் குறிக்கோள்.
சமூக, பொருளாதார, அரசியல் பண்பாட்டு விழிப்புணர்வு, மீள் பார்வை, மீட்டெடுக்கவே அதன் பயனுறு பயணம் என்பதைத் தொடங்குகையில் எவ்வளவு சங்கடங்களை, அடக்குமுறை அம்புகளை அதுவும் அந்நாளைய பிரிட்டிஷ் அரசிடமிருந்தும், அது எப்படி சந்தித்து மீண்டுள்ளது என்பதைப் புரிய பழைய நிகழ்வுகளை இங்கே தொகுத்து அளிக்கும் தொடர் இது!
படித்து அறிக, அறிந்து ஆதரவு தருக!
1935 ஆம் ஆண்டுக்குச் செல்வோமா?
அதன் தொடக்கத்திலேயே எப்படிப்பட்ட எதிர்நீச்சல், சோதனை, வழக்கு, தண்டனை, சிறைவாசம் அதன் ஆசிரியர், வெளியிடுவோருக்கு!
இதயத்தைத் தாக்கும் செய்திகள் - தகவல்கள் அல்லவா இவை?"உடல்நிலையும் முதலாவது கண்பார்வை சற்றுக் குறைவு, தலைவலி, அடிக்கடி மயக்கம், ஜீரண குறைவால் மார்புவலி, பல்வலி, சிறிது காதிலும் தொல்லை, குடல்வாதம், அதிகவேலை செய்யக்கூடாது என்று பிரபல வைத்தியர்களின் கண்டிப்பான அபிப்பிராயம் முதலிய நெருக்கடியானக் கஷ்டத்தில் இருக்கின்றது. தினப்படி வரும் தபால்களில் நூற்றுக்கணக்காய் வெறுக்கத்தக்க வண்ணம் புகழ்ந்தெழுதுபவை ஒருபுறமிருந்தாலும், வைதும் மிரட்டியும் எழுதப்பட்டுவரும் மொட்டைக் கடிதங்களுக்கும் குறைவில்லை. இவ்வளவு நிர்ப்பந்தங்களுக்கிடையில் நமது இயக்கம் ஒருவித நன்னிலை அடைந்து மேற்செல்லுவதையும், இவைகள் நமக்குப் பேரூக்கத்தை விளைவித்து வருவதையும் ஆயிரக்கணக்கான வாலிபர்கள் நம்மைத் தாங்கி நிற்பதையும், நாம் மனமார உணருகின்றோம். முடிவாக நமது கொள்கை களிலாவது, நமது எழுத்துகளிலாவது சொற்களிலாவது நமக்குச் சிறிதளவும் சந்தேகமோ மயக்கமோ இல்லாத அளவு தெளிவாயிருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்'' என அமைந்திருக்கிறது.
பெரியார் நிதிச்சுமை, உடல்நலன் இரண்டையும் மிகமிக வெளிப்படையாகத் தமது இதழ்களிலேயே பதிவிட்டு வாசகர்களிடம் பகிர்ந்துகொண்ட வெளிப்படைத் தன்மை அன்றைய இதழியல் உலகம் மட்டுமல்ல இன்றைய ஊடக உலகமும் காணாத அணுகுமுறை ஆகும். “நமது கொள்கைகளிலாவது, நமது எழுத்துகளிலாவது சொற்களிலாவது நமக்கு சிறிதளவும் சந்தேகமோ மயக்கமோ இல்லை " (குடி அரசு, 05.05.1929) என்னும் உறுதித்தன்மை பெரியாரின் பெரும் பலமாக வாசகர்களால் பார்க்கப்பட்டது. பெரியாரின் ஒளிவுமறைவற்ற இவ்வணுகுமுறைதான் மக்களிடம் அவருக்கெனத் தனித்ததொரு செல்வாக்கையும் ஈர்ப்பையும் உருவாக்கியது. பெரியார் வெளிப்படையாகவும் மிகைப்படுத்தல் எதுவுமின்றி வாசகர்களிடம் நிகழ்த்திய உரையாடல் என்பது நம்பிக்கை என்னும் மாபெரும் கட்டமைப்பை உருவாக்கியது. நம்பிக்கை என்னும் இக் கட்டமைப்பு தான் பெரியாரின் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கருத்துருவாக்கத் தலைவர்களை உரு வாக்கியது. இந்தக் கருத்துப்பரவல் படி நிலை அடுத்தடுத்த அடுக்குகளாக மக்கள் மன்றத்தில் ஊடுருவிச் சென்றது.
பெரியாரின் கொள்கை நேயம்
சமூக, அரசியல், பண்பாட்டுக் களத்தில் தான் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டும், முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பெரியாரிடம் இயல்பாகவே காணப்படவில்லை.
இதனால் தமது கொள்கைக்கு அணுக்கமானத் தோழமை அமைப்புகளையும், அவர்தம் இதழ்களையும் மக்கள் ஆதரிக்க வேண்டுமென்ற குரல் பெரியாரிடம் வெளிப்பட்டது.
மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும் எழுதிய 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, எனப்படும் சமதர்ம அறிக்கையை இந்தியாவில் வங்கமொழி, உருது மொழிக்கு அடுத்து முதன்முதலில் தமிழில் வெளியிட்ட இதழ் பெரியாரின் "குடி அரசு" இதழ்தான்.
"குடிஅரசு" இதழில் 1931 அக்டோபர் 4 ஆம் நாள் முதல் தொடர்ச்சியாக அய்ந்து இதழ்களில் சமதர்ம அறிக்கையின் தமிழாக்கம் வெளியானது. தமிழகத்தில் பொதுவுடைமை அமைப்பு முனைப்பாகக் களத்தில் இருந்த காலத்தில் போட்டி அமைப்பு என்றோ, போட்டிக் கொள்கை என்ற எண்ணமோ துளியும் இல்லாமல் பெரியார் தமது இதழில் சமதர்ம அறிக்கையின் மொழிபெயர்ப்பை வெளியிட்டது என்பது தான் பெரியாரின் அணுகுமுறை. அந்த நேசப்பூர்வமானத் தோழமை அணுகுமுறைதான் பெரியாருக்கானக் களங்களையும் தளங்களையும் விரிவாக்கின.
தமது கொள்கைக்கு அணுக்கமான அமைப்புகளையும் இதழ்களையும் ஆதரித்து ஊக்கப்படுத்துவதைப் பெரியார் தனது கடமையாகவே செய்துள்ளார். பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, தமிழர் நலன் போன்ற கருத்து நிலைகளில் இயங்கியத் தோழமை இதழ்களை வரவேற்று, ஆதரித்துத் தமது இதழ்களில் பாராட்டி எழுதுவதைப் பெரியார் வழக்கமான அணுகுமுறையாகக் கொண்டி ருந்தார். அவ்விதழ்களைப் போட்டி இதழ்களாகக் கருதாமல் வட்டந்தோறும் இது போன்ற இதழ்கள் பெருக வேண்டுமென வேண்டுகிறார்.
இது குறித்து 4.1.1931 நாளிட்ட "குடிஅரசு" இதழின் அறிமுகச்செய்தியில் குறிப்பிடும் பெரியார், " ''குடி அரசு'', ''குமரன்'', “நாடார் குலமித்திரன்', "முன்னேற்றம்", "தமிழன்', “புதுவை முரசு", "சண்டமாருதம்" ஆகியன வாரப்பத்திரிகை களேயாகும்.
''திராவிடன்" தினசரி ஒன்று இருந்தாலும் அது இருக்குமோ, போய்விடுமோ; இருந்தாலும் சுயமரியாதைக் கொள்கைக்கே உழைக்குமோ என்பது பற்றிப் பலருக்குச் சந்தேகமும் ஏற்பட்டு விட்டது. ஆனாலும், அதையும் சேர்த்தே பார்த்தாலும், இவை மாத்திரம் போதாதென்போம். சீக்கிரத்தில், "சுயமரியாதைத் தொண்ட"னும் கிளம்பி விடுவான் என்றே தெரிகின்றது.
ஏனெனில், அதன் ஆசிரியர் தனக்கு மறுபடியும் வேலையும் அவசியமும் வந்துவிட்டதாகக் கருதி முயற்சி எடுத்துக்கொண்டிருக் கின்றார். இனியும் ஜில்லாதோறும் ஒரு பத்திரிகை சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்திற்கு ஏற்பட வேண்டும் என்பதே நமதாசை" (குடிஅரசு, 4.1.1931) என்கிறார்.
- தொடரும்
No comments:
Post a Comment