சில்லாங், ஜூலை,25 மேகாலாயா பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் மரக் என்பவருக்குச் சொந்தமாக துரா பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் பொதுமக்களின் புகாரின் பேரில் சோதனை நடத்திய காவல்துறையினர் அங்கு 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல்தொழிலுக்கு பயன்படுத்தியது தெரியவந்தது, இது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேகாலயாவின் தூரா என்ற பகுதி யில் வார இறுதியில் பல சொகுசுக் கார்கள் வருவதாகவும் அங்கு சிறுமி களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த அவர்களுக்கு மதுபு கட்டப்படுவதாகவும் காவல்துறைக்கு புகார் வந்தது,
அங்கு சென்று நடத்தப்பட்ட சோதனையில், சுகாதாரமற்ற சூழலில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஆறு பெண் குழந்தைகள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், அந்த பண்ணை வீட்டில் 'விபச்சார விடுதி' இயங்கி வந்ததாகவும் அது பாஜக மாநில துணைத்தலைவர் பெர்னார்ட் மராக் என்பவருக்கு சொந் தமான என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் அவர் காவல்துறையின் விசா ரணைக்கு ஒத்துழைக்காமல் இருப்ப தாகவும் தெரிவித்தனர். இந்த வழக்கில் இதுவரை 73 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக காவலர்கள் கூறுகையில், "அனைத்து குழந்தைகளும் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்களால் சரியாகப் பேசக் கூட முடியவில்லை. பெர்னார்ட் மராக்கும் அவரது நெருங் கிய கூட்டாளிகளும் இந்த ரிசார்ட்டை பாலியல் தொழிலுக்காகப் பயன்படுத்தி உள்ளனர்" என்று கூறினர்.அங்கிருந்து 400 உயர் ரக வெளிநாட்டு மதுபாட் டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் அங்கு இருந்த 73 பேர் பிடிபட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு காண்டம் பாக்கெட்டுகள், 27 வாகனங்கள், 47 அலைபேசிகள் ஆகி யவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பல சிறுமிகள் அங்கு இருந்த ஒரு சுகாதாரமற்ற சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டவர்களாக இருக்கலாம் என்றும் அவர்களுக்கு போதை மருந்து ஊட்டப்பட்டிருந்த தால் நிதானமாக பேசமுடியவில்லை என்றும் காவல்துறை தரப்பிலும் விளக்கம் தரப்பட்டு உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி தொடர்பான விளம்பரம் ஒன்று சமூகவலைதளங்களில் வந்தது, இந்த நிலையில் பாலியல் தொடர்பாக அங்கு சென்ற ஒருவர் காணாமல் போன சிறுமி அங்கே இருப்பதைப் பார்த்துள்ள்ளார். இது தொடர்பாக அவர் வெளியே வந்து குறிப்பிட்ட படத்தில் உள்ள சிறுமி பாஜக தலைவரின் பண்ணை வீட்டில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டது குறித்து கூறினார். இதனை அடுத்து சிறுமியின் உறவினர்கள் அங்கு வந்து சிறுமியை மீட்டனர்.
இது தொடர்பாக காவல்துறையினர், சில வாரத்திலேயே அச்சிறுமி பல முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அச்சிறுமி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் பாஜக தலைவரும் அவனது நண்பர் ஒருவரும் தன்னையும் தனது தோழியையும் குறிப்பிட்ட பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று பல பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்து உள்ளார்.
அப்பகுதி மக்களும் அந்த பண்ணை வீடு தொடர்பாகப் புகார் அளித்துள் ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறையினர் அங்குச் சோதனைக்குச்சென்ற போது, அங்குப் பல சிறுமிகள் போதை மயக்கத்தில் இருந்துள்ளனர்.
விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த பல ஆண்கள் ஆடையில்லாமல் இருந்ததாகவும் அவர்களைப் பிடிக்க முயன்ற போது, அவர்களில் சிலர் தப்பி ஓடிவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால் இது தொடர்பாக பாஜக தலைவர் கூறும் போது அந்தச் சிறுமி களை நான் படிக்கவைக்கிறேன், அங்கு சிலர் என்னுடைய அனுமதியோடு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தனிமனித சுதந்திரத்தில் காவல்துறை ஏன் தலையிடுகிறது. என்று கூறி யுள்ளார்.
No comments:
Post a Comment