கும்பகோணம் மாவட்டத்தில் இல்லந்தோறும் விடுதலை சேர்ப்பு பணி 2-7-2022 உற்சாகமாக நடைபெற்றது. மாவட்டத்தலைவர் கு. நிம்மதி தலைமையில்,மாவட்டச் செயலாளர் சு.துரைராசு, பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயக்குமார், திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் வி.ழி.கணேசன், ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார் முன்னிலையில் குடந்தை ஒன்றியத்தலைவர் சோழபுரம் ஜில்ராஜ் அவர்களுக்கு 20 சந்தாவுக்கான 2 புத்தகங்களை வழங்கினோம், மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு சந்தா திரட்டித்தருவதாக உறுதியளித்தார் (02-07-2022)
இல்லந்தோறும் விடுதலை சேர்ப்பு காமலாபுரம் கிளை அமைப்பாளர் பெ. மாணிக்கம். அவர் காமலாபுரம் சார்பாக ஒரு புத்தகம் மாவட்ட திராவிட கழக செயலாளர் பீமதமிழ் பிரபாகரன் அவர்களிடம்பெற்றுக் கொண்டார் உடன் மேனாள் தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் பெ.மதிமணியன், பகுத்தறிவு ஆசிரியர் அணி மண்டல அமைப்பாளர் ஆசிரியர் இர.கிருஷ்ண மூர்த்தி.
கழக குமரிமாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலர் நாகர்கோவில் செல்வராஜ் விடுதலை இதழுக்கான சந்தாவினை வழங்கினார். குமரிமாவட்ட முதுபெரும் கம்யூனிச தோழர் ஈத்தாமொழி எஸ். தாமோதரன் விடுதலை இதழுக்கான சந்தாவினை குமரிமாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார்.
ஆத்தூர் மாவட்டத்தில் விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி தொடங்கியது
ஆத்தூர் மாவட்ட கழகத்தலைவர் த. வானவில் அய்ம்பது விடுதலை சந்தா இரசீதுகள் பெற்றுக்கொண்டார். திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி மேனாள் மாணவர் அ.முருகானந்தம் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கி மகிழ்ந்தார். மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் மாயக்கண்ணன் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் பத்து சந்தா இரசீதுகள் பெற்றுக்கொண்டார். ஆத்தூர் நகரத்தலைவர் பெரியார்பெருந்தொண்டர் வெ.அண்ணாதுரை 10 ஆண்டு சந்தா வழங்கியதுடன் இருபது சந்தா இரசீதினை பெற்றுக் கொண்டார். கழகப்பொதுக்குழு உறுப்பினர் தம்மம்பட்டி செயராமன் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் இருபது சந்தா இரசீது பெற்றுக்கொண்டார். மாவட்ட. தொழிலாளர் அணி செயாலாளர் வாழப்பாடி கூத்தன் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் இருபது சந்தா இரசீது பெற்றுக்கொண்டார்.
கழகப்பொதுக்குழு உறுப்பினர் அமிர்தம் சுகுமார் இரண்டாண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் 20 சந்தாஇரசீது பெற்றுக் கொண்டார். பெத்தநாயக்கன்பாளையம் திமுக முன்னோடி மகாலிங்கம் ஆறுமாத விடுதலை சந்தா வழங்கினார். ஆத்தூர் மாவட்ட கழக செயலாளர் நீ.சேகர் 5 ஆண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் 100 சந்தா இரசீது பெற்று மகிழ்ந்தார், கழகப்பொதுக்குழு உறுப்பினர் செயல்வீரர் பெத்தநாயக்கன்பாளையம் அ.சுரேசு, அவரது தாயார் அஞ்சலம், மகள் தமிழ்மதி ஆகியோர் 5 விடுதலை சந்தா வழங்கியதுடன் நூறுசந்தா இரசீது பெற்றுக்கொண்டார்கள். 102 வயது பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் தங்கவேல், மகன் மாவட்டத்தலைவர் த.வானவில், மற்றும் பேரப்பிள்ளைகளுடன் அய்ந்தாண்டு விடுதலை சந்தா தொகை வழங்கி மகிழ்ந்தார். ஆத்தூர் சிங்.இராசேந்திரன் ஆறுமாத விடுதலை சந்தா வழங்கி மகிழ்ந்தார்.
No comments:
Post a Comment