ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 31, 2022

ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சென்னை, ஜூலை 31 சென்னை எழும்பூரில் ஆதரவற்ற இல்லத்தில் தங்கியிருக்கும் பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன பயிற்சி மய்யத்தின் முன்னாள் முதல்வர் எம்.கே.கருப்பையாவின் மூத்த மகள் சூர்யா கடந்த 2014ஆம் ஆண்டு மர்ம காய்ச்சலால் திடீரென உயிரிழந்தார். அவரது நினைவாக மருத்துவர் கே.சூர்யா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை குடும்பத்தினரால் தொடங்கப்பட்டது. அவரது நினைவு நாள் மற்றும் பிறந்த நாளன்று ஆதரவற்ற சிறார்கள் மற்றும் முதியோர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்ஒருபகுதியாக மருத்துவர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள சேவா சமாஜம் ஆதரவற்ற தங்கியுள்ள பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதன்படி அவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், சோப்பு உள்ளிட்ட அன்றாட உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன. பின்னர் மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும், கரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வும் மாணவிகளுக்கு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எல்அய்சி பயிற்சி மய்ய மேனாள் முதல்வர் எம்.கே.கருப்பையா, எல்அய்சி வளர்ச்சி அதிகாரி ஆறுமுகசாமி, முதன்மை காப்பீட்டு ஆலோசகர் சுவிகர் ஜேக்கப், நிதி ஆலோசகர் ரங்கசாமி, பூர்ணசந்திரன் உள்ளிட்டோர் 

பங்கேற்றனர்.


No comments:

Post a Comment