தெற்கு ரயில்வே காலியிடங்களில் பெங்களூரு ஆர்ஆர்பி தேர்வர்களை கொண்டு நிரப்பக்கூடாது பொது மேலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 28, 2022

தெற்கு ரயில்வே காலியிடங்களில் பெங்களூரு ஆர்ஆர்பி தேர்வர்களை கொண்டு நிரப்பக்கூடாது பொது மேலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

 மதுரை, ஜூலை 28- தெற்கு ரயில்வே வேலை வாய்ப்புகளை பெங்களூரு ஆர்.ஆர்.பி  தேர்வர்களை கொண்டு நிரப்பக்கூடாது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  சு.வெங்கடேசன் தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு வலி யுறுத்தியுள்ளார்.  

தென்னக ரயில்வே துறை வேலை வாய்ப்புகளில், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. குறிப் பாக தெற்கு ரயில்வே யில் சரக்கு வண்டி பாதுகாவலர், லோகோ பைலட், மற்ற காலிப் பணியிடங் களில் அதிகளவு வடமா நிலத்தவர் கள் பணியமர்த்தப்படுவது சர்ச் சையாகி வருகிறது.

தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வரு கின்றன.  இந்திய அளவில், தமிழ் நாடும் கேரளாவும் கல்வியில் முதன்மையான மாநிலங்களாக இருந்து வரும் நிலை யில்  ரயில்வே தேர்வு உள்ளிட்ட ஒன்றிய   அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் மட் டும் தமிழர்களின் தேர்ச்சி விகிதம் என்பது மிகமிகக் குறைவாகவே இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை ஆர். ஆர். பி தேர்வு செய்து காத்திருப் போர் பட்டி யலில் இருந்த லோகோ பைலட் தேர்வர்களை விட்டு விட்டு  கோரக்பூர் தேர்வர்கள் 55 பேரை நிய மிக்க எடுத்த முடிவு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கைவி டப்பட்டது.  இந்நிலையில் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 

அதில்,தெற்கு ரயில்வேயில் உள்ள லோகோ பைலட் வருங்கால காலியிடங்களை  பெங்களூர் ஆர்ஆர்பி தேர்வர்களைக் கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்கப் படுவதாக அறிகிறேன். இது தெற்கு ரயில்வேயில் வேலை தேடும் இளை ஞர்களின் வேலை வாய்ப்பை பறிப் பதாகும். இம் முடிவை உடனடியாக கைவிட வேண்டு கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

டிஆர்இயு தொழிற்சங்க  மதுரை மண்டல இணைச் செய லாளர் ஆர். சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாட்டில் படித்த இளை ஞர்கள் குறிப்பாக பொறி யியல் படித்த இளைஞர்கள் வேலை யில்லாத சூழ்நிலையில் இரயில்வே நிர்வாகத்தின் இந்த முடிவு அரசு வேலைக் காக காத்திருக்கும் தமிழ்நாடு இளைஞர் களை வஞ்சிக்கின்ற செயலாகும். ரயில்வே பாதுகாப்பிற்கு நேரடியாக தொடர் புள்ள லோகோ பைலட்டுகள், நிலைய அதிகாரிகள், ரயில் வண்டி மேனேஜர்கள், பாயிண்ட்ஸ் மேன், டிராக் மேன் போன்றவற்றில் உள்ள லட்சக்கணக்கான காலியி டங்களை கடந்த மூன்று ஆண்டு களில் பூர்த்தி செய்ய போர்க்கால நடவடிக்கைகள் எடுக்காததான் காரணம். உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தால் 2018இல்  நடைபெற்ற சென்னை ரயில்வே தேர்வாணைய தேர்வில் உள்ள காத்திருப்போர் பட்டியலில் உள்ள இளைஞர்களுக் குத்தான் தரவேண்டும். ஆகையால் ரயில்வே நிர்வாகத்தின் தமிழ்நாடு விரோதப் போக்கை கைவிட்டு தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொள் கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment