கழகத் தலைவர் ஆசிரியர்
அரியலூர், ஜூலை 30 பேச்சை விட, காட்சியிலேயே எதிரிகளுக்குப் பதில் சொல்லக்கூடிய மாநாடுதான் அரியலூர் இளைஞரணி மாநாடு என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அரியலூரில் இன்று (30.7.2022) காலை தொடங்கிய திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறியதாவது:
திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் 19 தீர்மானங்களை நாம் நிறைவேற்றி இருக்கின்றோம் என்று சொன்னால், இந்தத் தீர்மானங்களுடைய தேவை என்ன? என்பதை இந்த நேரத்தில் நாம் சிறப்பாக உணர்த்தக் கூடிய வகையிலும் ஒவ்வொரு மாதமும் மாநாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
சென்ற மாதம் செஞ்சியில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாதம் அரியலூரில், திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த அரங்கே பெரிய அரங்கம் - இந்த அரங்கம் முழுவதும் நிரம்பியிருக்கிறது; கீழேயும் ஒரு அரங்கம் இருக்கிறது - அங்கே அமர்ந்து தோழர்கள் எல்.சி.டி திரையின்மூலமாகப் பார்க்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் என்று சொன்னால்,
ஒரு காலத்திலே திராவிடர் கழகம் இருக்குமா? என்று கேட்டார்கள்.
அடுத்ததாக திராவிடர் கழகத்திலே இளைஞர்கள் இருப்பார்களா? என்று கேட்டார்கள்.
எல்லோரும் இருப்பார்கள் - அவர்கள்தான் சரித்திரம் படைப்பார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு இந்த மாநாடு, எதிரிகளுக்குப் பதில் சொல்லக்கூடிய மாநாடாக - பேச்சை விட, காட்சியிலேயே பதில் சொல்லக்கூடிய மாநாடாக அமைந்திருக்கிறது என்றார் கழகத் தலைவர் அவர்கள்.
No comments:
Post a Comment