'மண்டல்காரன்'
காவி : ஏன்யா, ஏதோ பெரிசா உங்க 'ஆசிரியர்' - 'விடுதலை'ங்கிறே - ஒரு சாமி இல்லே, ஹிந்துமதம் கூடாது அப்படி இப்படின்னு 'கன்னா பின்னா'ன்னு கண்டபடி எங்களையெல்லாம் தாக்கி எழுதுற ஒரு டெய்லி பேப்பருக்கு ஏதோ பெரிசா 60 ஆயிரம் சந்தா சேர்த்துக் கொடுக்கப் போறோம். அப்படி இப்படின்னு அளந்து விட்றீங்களே..! முடியுமாய்யா உங்களாலா? உங்கிட்ட என்ன எங்கிட்ட இருக்கிற மாதிரி பெரிய பெரிய கார்ப்பரேட், அம்பானி, அதானி, டாடா மாதிரி யாராவது இருக்காங்களா? சுத்த அன்னக்காவடி ஆளுங்கதான்யா நீங்க, இதை முடிக்க முடியுமா? வெத்துப் பேச்சு...
கருப்பு : நண்பரே, உங்களை மாதிரி பெரும் பணத் திமி லங்களை நம்பி இப்படி எங்க இயக்க பொதுக் குழுவிலே முடிவு எடுக்கலே.
எங்கிட்ட இருப்பவர்கள் எல்லாம் அன்னாடங் காய்ச்சிகள் தான் - 'தன்மானம் ஒண்ணுதான் எனக்கு இருக்கும் சொத் தாகும்'ன்னு உழைக்கிறவங்கய்யா?
மற்றவர்களைவிட, எங்க தலைவர் சொன்னார் "நாங்களே 60 ஆயிரம் பேர் சந்தா தர சக்தி உள்ளவங்கன்னு...." உழைப் பாளிகளுக்கா பஞ்சம்!
அதை நாங்களே முடிச்சிட முடியும்!
அதிலே துளியும் சந்தேகம் இல்லை. மற்ற பொதுவானவர்கள் 'விடுதலை'யை தினமும் படிச்சாதான்..... உங்க காவிகளின் வித்தைகளை, வித்தார விவகாரங்களையெல்லாம் புட்டுப் புட்டு வைக்கிற ஏடு தானய்யா 'விடுதலை!' அது பரவினால் தடுப்பூசி மாதிரி, போட்டுக்கிட்டே இருக்கணும், அப்போதான் 'பாம்பு எது - பழுதை' எதுன்னு தெரியும்!
'இல்லந்தோறும் விடுதலை' என்ற எண்ணத்தைத் தேக்கி உள்ளந்தோறும் விடுதலை பதிந்த நிலைதான். அந்த நாளேட்டின் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் உலகம் பூரா பரவி, ஏற்றுக் கொள்ளப்பட்டது. 'விடுதலை' என்று எழுதி தமிழிலே கணினிக்கு அதை தானேய்யா பயன்படுத்திறீங்க நீங்க...
உங்க பிள்ளைகளின் படிப்புக்கும் சேர்த்து வாதாடுவது 'விடுதலை' தான்யா! அதை மறந்துடாதே!!
இல்லைன்னா 'சூத்திர - பஞ்சமனான' உங்க பையன், பெண்கள் படிக்க முடியுமா?
யோசிங்க!!
No comments:
Post a Comment