டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத் தோடு நின்று விடாமல், விவாதத்தில் பங்கேற்று விலை வாசி, ஜி.எஸ்.டி. பிரச்சினைகளை பேசி முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பூடான் எல்லையோரம் தோக்லாம் பகுதியில் சீனா வீடுகளை கட்டி ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளதை சாடிலைட் படங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து செய்யப்பட்டதை திரும்பப் பெற இயலாது என மோடி அரசு நாடாளுமன்றத்தில் அறிவிப்பு.
தி ஹிந்து:
* மகாராட்டிராவில் அய்ந்து பேர் கொண்ட பாந்தியா கமிஷனின் அறிக்கையை ஏற்று நகர் பஞ்சாயத்து, நகர் பரிசத் மற்றும் பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளித்திட உச்ச நீதிமன்றம் உத்தரவு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) விலக்கு கோரும் மசோதா, தேசிய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை சீர்குலைக்கும், தேசிய கல்விக் கொள்கை மற்றும் பல்வேறு சட்டங்களுக்கு முரணானதா என்பதை தெளிவுபடுத்துமாறு தமிழகத்தை ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தெரிவித்துள்ளார்
.. - குடந்தை கருணா
No comments:
Post a Comment