சென்னை, ஜூலை 28- கீழமை நீதிமன்றங்களில், மின்னணு முறையில் வழக்கு தாக்கலுக்கான, 'இ-பைலிங்' உதவி மய்யங்கள், 26.7.2022 அன்று தொடங்கப்பட்டன.
உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில், காகிதமில்லா மனு தாக்கல் முறையை ஊக்குவிக்க, இ- பைலிங் என்ற மின்னணு வழி வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகளுக்கான நீதிமன்றம், மாநகர உரிமையியல் நீதிமன்றம், சைதாப் பேட்டை நீதிமன்றம், ஜார்ஜ் டவுன் மற்றும் எழும்பூர் நீதி மன்றங்களில், இ- பைலிங் முறைக்கான உதவி மய்யங்கள், திறக்கப்பட்டன. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற முதன்மை நீதிபதி சந்திரசேகர் ஆகியோர், மய்யங்களை துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சியில், நீதிபதிகள் திலீப், சுரேஷ், சிறப்பு நீதிமன்ற நீதிபதி தங்க மணி கணேஷ் மற்றும் 'லா அசோசியேஷன்' தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment