சென்னை,ஜூலை 28- ரயில்கள், ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை தடுக்க எடுக்கும் நடவடிக்கை குறித்து, பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை உத்த ரவை மறுஆய்வு செய்யக் கோரி, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை கொள்கையை, அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்வதாக உறுதி அளித் தனர்.
ஒன்றிய அரசு சார்பில், வழக்குரைஞர் வி.சந்திரசேகரன் ஆஜராகி, பிளாஸ்டிக் ஒழிப்புக்கு தெற்கு ரயில்வே எடுத்த நட வடிக்கைகள் குறித்த கடிதத்தை தாக்கல் செய்தார்.
இதையடுத்து, ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் 'பெட் பாட்டில்'கள் பயன்படுத்துவதை தடுக்க, எடுக்கும் நடவடிக்கை குறித்து, தெற்கு ரயில்வே விளக்கம் அளிக்கும் படி, நீதிபதிகள் உத்தர விட்டனர். ரயில்வே எடுக்கும் நடவடிக்கை, மற்ற துறைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் எனவும், நீதிபதிகள் தெரிவித்தனர்.
விசாரணையை, வரும் 28ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment