பெண் குடியரசுத்தலைவருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் மதுபோதையில் தள்ளாடிய பாஜக தலைவர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 26, 2022

பெண் குடியரசுத்தலைவருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் மதுபோதையில் தள்ளாடிய பாஜக தலைவர்!

சூரத், ஜூலை 26  பெண்கள் நிறைந்த மேடை யில் பா.ஜ.க. தலைவர் ஒருவர் மதுபோதையில் தள்ளாடிக்கொண்டு வந்தது பெரும் அதிர் வலையை ஏற்படுத்தி உள்ளது

இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணியின் திரவுபதி முர்மு தேர்ந்தெடுக் கப்பட்டு பதவியேற்றுள்ளார். இதனைக் கொண்டாடும் வகையில் பாஜகவினர் நாடு முழுவதும் பாராட்டு விழா நடத்தி வரு கிறார்கள்.

அந்த வகையில் குஜராத் மாநிலத்தின் சோட்டாடேபூர் என்ற மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் திரவுபதி முர்மு குடியரசுத் தலைவராக பதவியேற்றதை கொண்டாட பொதுக்கூட்டம் நடத்தப்பட் டிருக்கிறது.

அதில், பாஜகவின் மாவட்டத் தலைவ ரான ராஷ்மிகாந்த் வசவா என்பவர் முழு போதையில் தள்ளாடியபடி வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றதோடு, மேடையில் இருந்தபோது மதுபோதையில் தூங்கியும் வழிந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பாஜக அமைச்சர் நிமிஷா சுதாரும் பங்கேற்றிருந்தார்.

இது தொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, பலரது கண்ட னங்களையும் பெற்றுள்ளது. மேலும் அம் மாநில காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினரும் பாஜகவின் ராஷ்மிகாந்த் வசா பொது நிகழ்ச்சியில் குடித்துவிட்டு வந்தது பலரிடையேவும் முகம் சுழிப்பை ஏற்படுத்தி யிருக்கிறது என சுட்டிக்காட்டி கேள்விக் கணைகளை தொடுத்திருக்கிறார்கள்.

இந்த விவகாரம் பெரிதாகி, மாநில பாஜக சார்பில் நடவடிக்கை எடுக்க தயாராகியி ருந்ததை அடுத்து, ராஷ்மிகாந்த் வசவா, தன்னுடைய மாவட்டத் தலைவர் பதவியி லிருந்து விலகுவதாகக் கைப்பட எழுதி கடிதம் கொடுத்திருக்கிறார்.

இதனையடுத்து பாஜகவை கடுமையாக சாடிய குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஜக்திஷ் தாகூர், குஜராத்தில் மதுவிலக்கு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து ட்விட்டர் மூலம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

No comments:

Post a Comment