திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் வீ. சிவசாமியின் மகள் சி.அபிராமி +2-ல் 595/600 மதிப்பெண் பெற்றதை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து மகிழ்ந்தார். (30.6.2022,சென்னை)
திராவிட மக்கள் சமூக நீதி பேரவையின் பொதுச் செயலாளர் புலவர் திராவிடதாசன் தான் எழுதிய "பெரியாரால்! திராவிடத்தால் வாழ்கி றோம்!!" நூலினை தமிழர் தலைவர் வெளியிட்டார். (சென்னை - 20.6.2022)
திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுதலை நாளிதழுக்கு 60 ஆவது ஆண்டாக (ஆகஸ்ட் 10) ஆசிரியராக பொறுப்பேற்பதை முன்னிட்டு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை வழக்குரைஞர் ஜ.பீர் முஹம்மது ஒரு ஆண்டிற்கான விடுதலை சந்தாவினை நேரில் வழங்கினார். உடன் திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ்.
சிவகங்கை மாவட்ட மேனாள் தலைவர் மறைந்த உ. சுப்பையா மகன் பொறியாளர் அருண்குமார் பணி நிமித்தமாக லண்டன் செல்வதை முன்னிட்டு, ஆசிரியர் அவர்களை சந்தித்து 6 மாத விடுதலை சந்தாவை வழங்கினார். உடன் மணிமேகலை சுப்பையா மற்றும் பொறியாளர் கார்த்திக். (சென்னை - 21.06.2022)
No comments:
Post a Comment