ஜூலை 20 அன்று காரைக்குடியில் நடைபெற்ற விடுதலை சந்தா வழங்கல் நிகழ்வு நமது பொறுப் பாளர்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும், உற்சாகத் தையும் தந்திருக்கிறது.
நமது கழகத் தோழர்கள் மீது தலைமைக் கழகம் வைத்திருக்கும் மிகுந்த நம்பிக்கையை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறது.
அந்த நம்பிக்கையை நிலைப்படுத்திக் கொள்ள மிகப் பெரிய வாய்ப்பு இது.
வீடு தோறும் விடுதலை என்பதே நமது நோக்கமாக இருக்கட்டும்.
தமிழர் சமுதாயத்தின் இழிவை நீக்கி, அடிமைத் தளையை ஒழித்து - மானமும், அறிவும், இன உணர்வும் தந்த ஏடு விடுதலை என்கிற உணர்வும், தந்தை பெரியார் எனும் மான மீட்பரின் முதன்மைப் போரா யுதம் விடுதலை என்கிற எண்ணமும், இந்தப் பெரும் பணியை உந்தித் தள்ளும் நெம்பு கோலாக இருக் கட்டும்!
தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு 88 ஆண்டுகள் என்கிற வரலாற்றுப் பெருமிதம் ஒரு புறம் என்றால், அந்த ஏட்டினை 60 ஆண்டுகளாக தாங்கிப் பிடித்த தலைவர் ஆசிரியர் என்கிற பெருமகிழ்வு மறுபுறம்!
"பெரியாரே கவசம்! விடுதலையே தன் சுவாசம்" என்று 90 அய்த் தொடும் தலைவர் நூற்றாண்டு காண 'விடுதலை'யே அருமருந்து!
செயல்படுவோம் விரைந்து....
- ம.கு.வைகறை
காரைக்குடி
No comments:
Post a Comment