சென்னை, ஜூலை 1- எஸ்.எஸ்.எல்.சி. தேர்வின் சிறப்பாகச் சொல்லப்படுவது வெற்றி, தோல்வி கிடையாது என்பதே. பள்ளிப் படிப்பு முடிந்தது என்ற அறிவிக்கை மட்டுமே கல்லூரிப் படிப்புக்குத் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண் களைப் பல்கலைக் கழகமும், அரசுப் பணியில் சேர்வதற்குப் பணியாளர் தேர்வாணையமும் நிர்ணயிக்கின்றன.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது ஆங்கிலத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பத்து பிரிவேளைகளுக்கு மேல் ஆங்கிலத்துக்கு ஒதுக்கப்பட்டது. இன்று மொழிப் பாடங்கள் பின் தள்ளப்பட்டு கணிதம், அறிவியல் பாடங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பேசுவதைவிட படித்துப் புரிந்து கொள்வதே ஆங்கிலம் கற்பதன் நோக்கமாயிற்று. இன்றைய கால கட்டத்தில் பிற அறிவுகளுக்கான ஜன்னலாகவே ஆங்கிலம் உள்ளது.
No comments:
Post a Comment