"மலையாள மனோரமா" இதழின் கருத்தரங்கில் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் உரை
சென்னை, ஜூலை 31 கேரள மாநிலம் - திருச்சூரில், “மலையாள மனோரமா” நியூஸ் சார்பில் “இந்தியா 75” என்ற தலைப்பில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கருத்தரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை முகாம் அலுவலகத் திலிருந்து கலந்து கொண்டு ஆற்றிய உரையில், ஆளுநர்கள் மூலமாக மாநிலங்களில் இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. தலைமை!” எனக் கடுமையாகச் சாடினார்.
மேலும் முதலமைச்சர் அவர்கள் தமது உரையில், “வலிமையான மாநிலங்களே இந்தியாவின் பலம்!” என்று குறிப்பிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.7.2022) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கேரள மாநிலம், திருச்சூரில் மலையாள மனோரமா நியூஸ் சார்பில் நடைபெற்ற ‘இந்தியா - 75’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு ஆற்றிய உரை வருமாறு:-
பஹுமானப்பட்ட கேரள முக்கிய மந்திரியும் - என்டெ ப்ரியப்பட்ட சகாவுமான
பினராயி விஜயன் அவர்களே!
(கேரள மாநிலத்தின் முதலமைச்சரும் - எனது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய தோழருமான மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களே!)
மலையாள மனோரமயுடே நியூஸ் எடிட்டர் - ஜானி லூக்கோஸ் அவர்களே!
(மலையாள மனோரமா இதழின் செய்தி ஆசிரியர் ஜானி லூகோஸ் அவர்களே!)
“தி வீக்” மேகசின் மாத்யம ப்ரவர்த்தகர் - லட்சுமி சுப்பிரமணியம் அவர்களே,
(தி வீக் செய்தியாளர் லட்சுமி சுப்பிர மணியம் அவர்களே!)
மலையாள மனோரமாவில் பணி செய்யுன்ன -மாத்யம ப்ரவத்தகரே!
(மலையாள மனோரமா இதழின் ஊடகவியலாளர்களே!)
விவித விஷயங்களெ குறிச்சு - சம்சாரிக்கான் எத்திட்டுள்ளவரே!
(இந்தக் கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற இருக்கும் கருத்தாளர்களே!)
நிங்கள் எல்லாவர்க்கும் என்டே வணக்கம்!
(அனைவர்க்கும் வணக்கம்!)
மலையாள மனோரமயுடே “இந்தியா 75” எந்ந, ஈ பரிபாடியில் பங்கெடுத்து நிங்களை எல்லாம் காணான் கழிஞ்சதில், எனிக்கு சந்தோஷமுண்டு!
(மலையாள மனோரமா இதழின் சார்பில் நடைபெறும் ‘இந்தியா - 75 ஆண்டுகள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் காணொலி மூலமாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடை கிறேன்.)
எனிக்கு திருச்சூருக்கு நேரிட்டு வராம் ஆயிருன்னு!
(திருச்சூருக்கு நான் நேரில் வந்திருக்க வேண்டும்.)
ரெண்டு ஆழ்ச்ச முன்பு, எனிக்கு கோவிட் வந்நதினால், சில ஆரோக்ய புத்திமுட்டுக்கள் உண்டு.
(இரண்டு வாரங்களுக்கு முன் கரோனா தொற்றால் நான் பாதிக்கப் பட்டதால் உடல் சோர்வு உள்ளது)
டாக்டர்மார் யாத்ரானுமதி நல்காத தினால், எனிக்கு அவிடே வரான் கழிஞ்ஞில்லா.
(வெளியூர்ப் பயணங்களை ஓரிரு வாரங்களுக்குத் தவிர்க்க மருத்துவர்கள் சொல்லிய காரணத்தால் அங்கு நேரில் வர இயலவில்லை.)
ஏப்ரல் மாசத்தில் சி.பி.அய்.எம் Conference-இல் பங்கெடுக்கான் ஞான் கண்ணூ ரில் வந்நிருன்னு.
(கடந்த ஏப்ரல் மாதம் கண்ணூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நான் வந்திருந்தேன்.)
அந்நு, கேரள சர்க்காரும், ஜனங்களும் எனிக்கு தந்ந ஸ்வீகரணம் மறக்கான் ஆவுன்னதல்லா.
(அப்போது எனக்கு கேரள மாநில அரசும், மக்களும் அளித்த வரவேற்பை நான் இன்னும் மறக்க முடியவில்லை.)
ஞான் சம்சாரிச்சி கழிஞ்ஞப்போள் முழங்கிய, ‘ரெட் சல்யூட்! ரெட் சல்யூட்!’ எந்ந அபிவாத்தியங்கள் இன்னும் எனிக்கு கேள்க்காம்.
(நான் பேசி முடித்ததும் - ‘ரெட் சல்யூட் - ரெட் சல்யூட்’ என்று சொல்லி எனக்கு அந்த மாநாடே வாழ்த்து தெரிவித்த காட்சி நெஞ்சில் நிழலாடி வருகிறது.)
என்னெ, அவரில் ஓராளாயி கண்டு கொண்டாணு மலையாளிகள் ஸ்வீகரிச்சது.
(என்னையும் தங்களில் ஒருவராக நினைத்து கேரள மாநில மக்கள் வரவேற்பு கொடுத்தார்கள்.)
என்டெ கூட செல்பியும் எடுத்து.
(செல்பி எடுத்துக் கொண்டார்கள்.)
ஈ நல்ல ஓர்மைகளோடு ஒப்பம், திருச்சூருக்கு வரணும்னு ஆக்ரஹம் உண்டாயிருந்நு.
பக்ஷே வரான் சாதிச்சில்லா.
(அத்தகைய மகிழ்ச்சியான நினைவு களுடன் திருச்சூருக்கு வர நினைத்தேன், வர முடியவில்லை.)
பல்வேறு சோதனைகளை சந்தித்த செய்தி நிறுவனம்!
மலையாள மனோரமா இதழானது 1890-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று இந்தியா முழுமைக்கும் அதிகமான வாசகர் களைக் கொண்ட இதழாக இருக்கிறது. மலையாள மனோரமா செய்தி நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. வெறும் செய்தி நிறுவனமாக மட்டுமல்லாமல் தனக்கென ஒரு கொள்கை - கோட்பாடு கொண்ட நிறுவனமாக இருந்ததால் பல்வேறு சோதனைகளைச் சந்தித்த செய்தி நிறுவனம் இது. அத்தகைய துணிச்சல் தான் இந்தளவுக்கு இந்த நிறுவனத்தை வளர்த்துள்ளது.
கேரளாவைப் பொறுத்தவரையில், மலையாள மனோரமா என்பது பெரும்பா லானவர் குடும்பத்தில் ஓர் அங்கம் என்று சொல்லத்தக்க நிலையை அடைந்துள்ளது. அத்தகைய பெருமைமிகு நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் கருத்தரங்கில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டு கள் ஆவதையொட்டி, India 75 - The state of affairs – Federalism, Freedom and Forward - என்ற இந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணம்
கூட்டாட்சிக் கருத்தியலும் - விடு தலையால் பெற்ற உரிமைகளும் - அனைத்து விதமான வளர்ச்சிக்கான முற்போக்குச் சிந்தனைகளும் இணைந்துதான் இந்தி யாவை இந்தளவுக்கு வளர்த்துள்ளன.
இந்தியாவின் வேற்றுமைகளை மதிக்கக் கூடியவராக
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் இருந்தார்கள். பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழ மொழிவாரி மாகாணங்களை உருவாக்கிக் கொடுத்தார் பிரதமர் நேரு. இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தி அவர்கள் மீது திணிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார் பிரதமர் நேரு.
மதச்சார்பற்ற மனிதர் நேரு!
அய்ந்தாண்டுத் திட்டங்களைக் கொண்டு வந்து அனைத்து மாநி லங்க ளுக்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தார்.
வறுமை ஒழிப்புத் திட்டங்க ளைச் செயல்படுத்தினார்.
அனைத்து மாநிலங்களிலும் பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கித் தந்தார்.
மதச்சார்பற்ற மனிதராக அவர் இருந்தார்.
சகோதரத்துவத்தை வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முக்கி யத்துவம் கொடுத்தார்.
அனைத்துத் தரப்பும் விவாதம் செய்யும் களமாக நாடாளுமன்றத்தை நடத்திக் காட்டினார்.
கூட்டாட்சி நெறிமுறைகளை அவர் அடிக்கடி பேசினார்.
இந்தியா முழுவதும் இருந்த பல்வேறு மாநில முதலமைச்சர்களோடு அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தினார். கடிதங்கள் எழுதினார்.
முதலமைச்சர்களுக்கு அவர் எழுதிய கடிதங்களே பல்வேறு தொகுப்புகளாக வெளியாகி இருக்கிறது.
இத்தகைய காரணங்களால்தான் இந்தி யாவானது 75 ஆண்டுகள் வலிமையோடு நின்று கொண்டு இருக்கிறது.
இந்தியா என்பது ஒற்றை அரசு அல்ல!
இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையாக இருக்க வேண்டு மானால் இதே கருத்தியல்களை மேலும் மேலும் வலிமைப்படுத்த வேண்டும்.
* Federalism (கூட்டாட்சி)
* State Autonomy (மாநிலத் தன்னாட்சி)
* Secularism (மதச்சார்பின்மை)
* Equality (சமத்துவம்)
* Fraternity (சகோதரத்துவம்)
* Socialism (சமதர்மம்)
* Social Justice (சமூகநீதி)
நம்மள், ஈ மூல்யங்களெ பலப்படுத்தணும்!
(இவற்றை நாம் வலிமைப்படுத்த வேண்டும்.)
(இவை அனைத்தையும் காப்பாற்று வதுதான் இந்தியாவைக் காப்பாற்றுவது ஆகும்.)
75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது என்பது வெறும் கொண்டாட்டமாக இருக்கக் கூடாது. இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையோடு இருப்பதற்கான திட்டமிடுத லாக நமது சிந்தனைகள் அமைய வேண்டும்.
இந்தியா என்னால், அதிர்த்திகள் அல்லா!
(இந்தியா என்பதை வெறும் நிலப் பரப்பின் எல்லைகளாக நாம் கருதக் கூடாது.)
இவிடத்தே ஜனங்களாணு!
(இந்தியா என்பது இங்கு வாழும் மக்கள்தான்.)
India is not just a single government!
(இந்தியா என்பது ஒற்றை அரசு அல்ல!)
ஒருபாடு சம்ஸ்தான சர்க்காருகளுடெ கூடிச்சேரலாணு இந்தியா!
(பல்வேறு மாநில அரசுகளின் ஒன்றியம்தான் இந்திய அரசு.)
ஒன்றியம் - யூனியன் எந்நது தெட்டாய பிரயோகம் அல்லா!
(ஒன்றியம் - யூனியன் என்பது தவறான சொல் அல்ல)
Constitution-லும் ஈ வாக்கு உண்டு!
(அரசமைப்புச் சட்டம் இந்தியாவை வரையறுக்கப் பயன்படுத்தும் சொல் யூனியன்தான்.)
இந்தியாவைக் காக்கான், இந்தியாவில் உள்ள எல்லா
சம்ஸ்தானங்களையும் காக்கணும்!
(இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்திய
ஒன்றியத்துக்குள் உள்ளடங்கியுள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும்.)
மாநிலங்களின் ஒன்றியம்
எல்லா சம்ஸ்தானங்களையும் காத்தால் மாத்ரமே,
இந்தியாவை காக்கான் கழியு.
(மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்படும்.)
‘Uniformity is different from Unity’, as stated by - the great icon of Tamil Nadu Perarignar Anna.
(தமிழ்நாட்டின் மாபெரும் அடையாளமான அறிஞர் அண்ணா கூறியது போல, ஒரே போல ஆக்குவது என்பது ஒற்றுமையில் இருந்து வேறுபட்டது.)
You cannot achieve UNITY, by bringing UNIFORMITY!
(ஒற்றைத்தன்மையைத் திணிப்பதன் மூலம் ஒற்றுமையைக் கொண்டுவர முடியாது)
பிரியப்பட்ட மலையாளிகளே!
மலையாளத்தில் பிரமுக எழுத்துக்காரனாய - ‘சிஹாபுத்தின் பொய்த்தும்கடவு’ ‘Truecopy Think’ website-இல் எழுதிய ஒரு லேகனத்திண்டெ தமிழ் விவர்த்தனம் ஞான் வாயிச்சு.
(அன்புக்குரிய மலையாளிகளே, பிரபல மலையாள எழுத்தாளர் சிஹாபுத்தின் பொய்த்தும்கடவு ‘Truecopy Think’ தளத்தில் எழுதிய ஒரு கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பை நான் அண்மையில் வாசித்தேன்.)
அது திமுக முகப்பத்ரமாய முரசொலியில் பப்ளிஷ் செய்திருந்நு.
(அது தி.மு.க.வின் நாளேடான முரசொலியில் வெளியிடப்பட்டிருந்தது.)
“புதிய சாஸ்திர கண்டுபிடித்தங்களுக்குப் போலும், தனதாய தமிழ் வாக்குகள் உண்டு.
(புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் கூட தமிழில் இணையான சொற்கள் உண்டு)
பக்ஷே, மலையாளதிண்டே பல நாட்டுமொழிகளிலும் உள்ள, நல்ல வாக்குகள் இப்போள் கேள்க்கான் இல்லா” என்னு அத்தேஹம் வேதனையோடு எழுதிட்டுண்டு.
(ஆனால், மலையாளத்தில் பல வட்டார வழக்குகளிலும் உள்ள அழகிய சொற்கள் அழிந்து வருகின்றன என வேதனையோடு அவர் அக்கட்டுரையில் எழுதி யிருந்தார்.)
மலையாளமும் தமிழும் தம்மிலுள்ள ஆழமேறிய
பந்தத்தெ குறிச்சும் அத்தேஹம் பறயுந்நு.
(மலையாளத்துக்கும் தமிழுக்கும் இடையேயான
ஆழமான உறவைக் குறித்தும் அவர் குறிப்பிடுகிறார்.)
அதோடொப்பம், அந்நிய பாஷ வாக்குகளுடெ ‘கடந்நு வரவினே’ தமிழ்
எங்ஙனே தடுத்து எந்நும் அத்தேஹம், ஆ லேகனத்தில் பறயுந்நு.
(அதோடு, பிறமொழிச் சொற்களின் ஆக்கிரமிப்பைத் தமிழ் எவ்வாறு தடுத்து நிறுத்தியது என்றும் அவர் அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்.)
மலையாளிகள் எல்லாவரும் ஆ லேகனம் வாயிக்கணும் என்னாணு என்டே ஆக்ரஹம்.
(மலையாளிகள் எல்லாரும் அக்கட்டுரையைப் படிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.)
ஒற்றை மொழி தேசிய மொழி ஆக முடியாது!
இந்தியாவுக்கு One National Language சாத்தியமல்லா!
(இந்தியாவில் ஒற்றை மொழி தேசிய மொழி ஆக
முடியாது.)
காரணம், இந்தியாவில் ஒருபாடு பாஷைகள் உண்டு!
(ஏனென்றால் இந்தியாவில் எத்தனையோ மொழிகள் இருக்கின்றன.)
எல்லாவர்க்கும் ஒரு மதம் எந்நது அங்கீகரிக்கான் ஆவில்லா!
(இந்தியாவுக்கு ஒற்றை மதம், அனைவர்க்குமான மதமாக இருக்க முடியாது.)
ஒரே மொழி மட்டும் இருக்க முடியாது
காரணம், இவிடே ஜனங்கள் ஒருபாடு மதங்கள்
அனுவர்த்திக்குன்னு.
(ஏனென்றால், இந்தியாவில் பல்வேறு மத வழிபாட்டு முறைகள் இருக்கின்றன.)
இந்தியாவில் ஒற்றை சம்ஸ்காரம் அல்ல உள்ளது.
(இந்தியாவில் ஒற்றைப் பண்பாடு இல்லை.)
ஊனு, துணி தொடங்கி எல்லாத்திலும் வித்தியாசங்கள் உண்டு.
(உணவு, உடை அனைத்திலும் ஆயிரம் வேறுபாடுகள்.)
எங்கிலும், நம்மளெ சேர்த்து நிறுத்துந்நது ஸ்னேஹவும், சாஹோதர்யவும் ஆணு.
(இவ்வளவு வேற்றுமைகளை வைத்துக் கொண்டும் ஒன்றாக வாழ - நமக்குள் இருப்பது அன்பும் மனிதநேயமும் மட்டும்தான்.)
ஏக மதம், ஏக பாஷா, ஏக சம்ஸ்காரம் என்னிவ அடிச்சு ஏல்ப்பிக்குந்நவர் நம்முடே ஒரும தகர்க்குந்நு.
(ஒற்றை மொழியை - ஒற்றை மதத்தை - ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்க நினைப்பவர்கள் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க நினைக்கிறார்கள்.)
நம்முடெ ஒரும தகர்க்கான் நோக்குந்நவர் இந்தியாவுடெ சத்ருக்கள் ஆணு!
இந்தியக்காருடெ சத்ருக்கள் ஆணு!
(இந்திய ஒற்றுமையைச் சிதைக்க நினைப்பவர்கள் இந்தியாவின் எதிரிகள்.
இந்திய மக்களின் எதிரிகள்.)
இத்தரம் துஷ்ட சக்திகளுக்கு நம்மள் இவிடே ஒரிக்கலும் இடம் கொடுக்கருது!
(இந்தத் தீய சக்திகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.)
உறப்புள்ள சம்ஸ்தானங்களாணு, Federalisa-த்திண்டெ அடித்தரா!
(வலுவான மாநிலங்கள்தான் கூட்டாட்சியின் அடிப்படை.)
வலிமையான - அதிகாரம் பொருந்திய - தன்னிறைவு பெற்றவையாக மாநிலங்கள் இருப்பது இந்தியாவுக்கு வலிமைதானே தவிர, அது பலவீனமல்ல!
வலிமையான - வசதியான - தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களால் இந்தியாவுக்குப் பயன்தானே தவிர, குறைவு ஏற்படாது! இந்தியாவின் மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடாக இருப்பதால்
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும்தானே நன்மை கிடைக்கிறது?
மாநிலங்கள் தன்னாட்சி
கொண்டவைகளாக இருக்க வேண்டும்!
ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு.
தமிழ்நாட்டின் பங்கு என்பது இந்தியாவுக்குத்தானே நன்மை?
மாநில அரசுகள் மிகச்சிறப்பாக மாநிலங்களை வழிநடத்துவதால் ஒன்றிய அரசு பலம் அடையுமே தவிர, பலவீனம் அடையாது! இன்னும் சொன்னால், மக்களோடு நேரடியாக தொடர்பில் இருப்பவை மாநில அரசுகள்தான்! மக்களின் அனைத்து அன்றாடத் தேவைகளையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்ற வேண்டிய கடமை மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. எனவே, மாநில அரசுகளைத் தன்னிறைவு பெற்ற அரசுகளாக வைத்திருந்தால்தான் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு மாநிலங்கள் தன்னாட்சி உரிமை கொண்டவையாக இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் பேசக் கூட உரிமை இல்லை!
இந்திய அரசானது கூட்டாட்சிக் கோட்பாட்டை மதித்துச் செயல்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இந்தியாவை ‘ஏகஷிலா சம்ஸ்காரமாயி’ மாற்றுந்நது நமக்கு ஒரிக்கலும் அங்கீகரிக்கான் ஆவில்லா!
(ஒற்றைத் தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்றும் முயற்சியை நாம் ஏற்க முடியாது.)
இதினே, நம்மள் ஒருமிச்சி, சக்தமாயி எதிர்க்கணும்!
(அதனை வலிமையாக, உறுதியாக, ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.)
பல்வேறு சிந்தனைகள் மோதும் களமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றங்களில்- பேசுவதற்கான உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே மறுக்கப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் உள்பட 27 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். கருத்தைச் சொல்வதற்கான களமான நாடாளுமன்றத்தில்கூட பேச உரிமை இல்லை.
இதுதான் இந்திய மக்களாட்சியின் இன்றைய நிலை!
GST has robbed states, of their fiscal autonomy. GST compensation amount is not released on time. And not fully also.
(சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக மாநிலங்களின் நிதி உரிமை பறிக்கப்பட்டு விட்டது. இழப்பீடாக தரப்படும் நிதி உரிய நேரத்தில் தரப்படுவது இல்லை. முழுமையாகவும் தருவது இல்லை.)
Entrance Exams like NEET deny education to the oppressed.
(நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் எளியோருக்குக் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது.) National Education Policy 2020 is a barrier to education.
(புதிய கல்விக் கொள்கை என்பது கல்வியைப் பல்வேறு படிநிலைகளில் தடுப்பு போட்டு மறிக்கும் கொள்கையாக உள்ளது.)
The policies of Union Govt are Anti-people. (ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள், மக்கள் விரோதச் சட்டங்களாக இருக்கின்றன.)
BJP attempts to run parallel governments, through its Governors.
(ஆளுநர்களின் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது பாஜக தலைமை.)
We have to govern our states, even as we face, all these hurdles.
(இவை அனைத்துக்கும் இடையில்தான் மாநிலங்களில் ஆட்சி நடத்தியாக வேண்டும்.
அரசியல் நடத்தியாக வேண்டும்.)
And we have to fulfill the needs and expectations of people as well.
(மக்கள் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தாக வேண்டும்.)
But I am still hopeful!
(அதற்காக நான் நம்பிக்கை இழக்கவில்லை.)
கல்வி உரிமை மறுக்கப்படுகிறது!
இந்தியாவின் மிக நீண்ட வரலாறும் - இந்திய மக்களின் சகோதர உணர்வும் - இந்தியாவை நிச்சயம் காக்கும் என்று நான் நம்புகிறேன்.
மலையாள மனோரமா போலுள்ள மாத்யமங்கள், தங்களுடே மற்ற கடமைகளோடு ஒப்பம், இந்தியாவை சம்ரக்ஷிக்கான் வேண்டியும் ப்ரவர்த்திக்கணும்! அது நிங்கள் மறக்கான் பாடில்லா!
(மலையாள மனோரமா போன்ற இதழ்களுக்கு - தங்களது ஊடகப் பணியைத் தாண்டி இந்தியாவைக் காக்கும் பணி இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.)ள
ஈ 75 கொல்லங்களாயி இந்தியாவை நயிக்குன்ன மூல்யங்களை காக்கான், ஜனாதிபத்ய சக்திகளோடொப்பம் மாத்யமங்களும் பங்குசேரணும்.
(75 ஆண்டுகள் இந்தியாவைக் காத்த அரசியல் நெறிகளைக் காக்க ஜனநாயக சக்திகளோடு இணைந்து ஊடகங்களும் கருத்துப் பிரச்சாரத்தை தொடர வேண்டும்.)
75 ஆண்டுகளுக்கு முன்னால் மாநில முதலமைச்சர்களுக்கு அன்றைய பிரதமர் நேரு கடிதம் எழுதியபோது, “மிக நீண்டகால நன்மையாக இருந்தாலும், குறுகிய கால நன்மையாக இருந்தாலும் இந்தியாவுக்கு ஜனநாயகமே பொருத்தமானது! இந்தியாவுக்கு மட்டுமல்ல எந்த நாட்டுக்கும் ஜனநாயகமே பொருத்தமானது” என்று சொன்னார்.
அத்தகைய ஜனநாயக விழுமியங்கள் கொண்ட நமது இந்தியாவை எந்நாளும் பாதுகாக்க நம்மை அர்ப்பணிப்போம்!
எண்டெ பிரியப்பட்ட மலையாள உடன்பிறப்புகள் எல்லாவர்க்கும் நன்னி! வணக்கம்!
(எனது அன்புக்குரிய மலையாளி உடன்பிறப்புகள் எல்லோருக்கும் நன்றி! வணக்கம்!)
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment