டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் பரிசோதனை முயற்சிகளால் நாட்டின் பாதுகாப் புக்கும், இளைஞர்களின் எதிர்காலத்துக்கும் ஆபத்து ஏற் பட்டுள்ளதாக காங்கிரஸ் மேனாள் தலைவரும், நாடாளு மன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
உத்தரப் பிரதேசத்தில், பிரதமர் மோடி, முதலமைச்சர் யோகியின் ஒளிப்படங்கள் மதுரா மாவட்டத்தில் உள்ள கோசி கலன் மின் உற்பத்தி நிலையத்தில் குப்பையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர், இதேபோல் மதுரா நகரில் பிரதமர், முதலமைச்சரின் ஒளிப்படங்களை குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற தொழிலாளி பணிநீக்கம் செய்யப்பட்டார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment