குரங்கு எங்கே பிறந்தால் என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

குரங்கு எங்கே பிறந்தால் என்ன?

ஹனுமன் பிறந்த இடத்துக்கு சண்டை போடும் இரண்டு மாநிலங்கள்


பெரு நாட்டில் வாழ்ந்த மாயா இன மக்கள் வழிபட்டு வந்த குரங்கு சிலை

உண்மையான ஹனுமன் பிறந்த இடம் தொடர்பாக கருநாடகாவும் ஆந்திரப் பிர தேசமும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. குரங்கு  கடவுளான ஹனுமனின் பிறப்பிட மாகக் கருதப்படும் கொப்பல் மாவட்டத்தில் உள்ள அஞ்ஜெயநாத்ரி மலையில் உள்ள கோயிலை மறுசீரமைக்கும் பணியைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு கருநாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மேம்பாட்டுப் பணிகளுக்கான வரைபடம் தயாராக உள்ளதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங் தெரிவித்துள்ளார் உண்மையான ஹனுமன் ‘ஜென்மஸ்தலம்’ தொடர்பாக கருநாடகாவும் ஆந்திராவும் மோதலில் ஈடுபட்டுள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

வட கருநாடகாவில் ஹம்பிக்கு அருகில் உள்ள கிஷ்கிந்தாவில் உள்ள அஞ்ஜெய நாத்ரி மலையில் இந்துக் கடவுள் ஹனுமான் பிறந்ததாக கருநாடகா கூறும்போது, ​​ஆந் திரா ஹனுமன் பிறந்த இடமாக திருமலை யின் ஏழு மலைகளில் உள்ள அஞ்சனாத்ரி யைக் குறிப்பிடுகிறது.

கருநாடக அரசின் ஹனுமன் கோவில் திட்டம் என்ன?அஞ்ஜெயநாத்ரி மலையில் உள்ள அனுமன் கோவிலையும், அயோத்தி யில் வரும் ராமன் கோவிலையும் சுற்றுலா வழித்தடத்தின் மூலம் இணைக்க முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு விரும்புகிறது.

அஞ்ஜெயநாத்ரி மலையில் ஏற்கெனவே உள்ள கோவிலை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தில் அடங்கியுள்ளது. உலக பாரம் பரிய இடமான ஹம்பியில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோவில் துங்க பத்திரை நதியைத் தாண்டி உள்ளது.

இத்திட்டத்தில் சாலை அமைத்தல் மற்றும் மலைக்கோயிலுக்கு மாற்று வழிகள் அமைத்தல் ஆகியவை அடங்கும்.பசவராஜ் பொம்மை சனிக்கிழமை வெளி யிட்ட அறிக்கையில், “இந்த திட்டத்துக்கு 60 ஏக்கர் நிலம் தேவை. இதில் 58 ஏக்கர் தனியார் நிலம் விவசாயிகளுக்கு சொந்த மானது. விவசாயிகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அல்லது கருநாடக தொழில் துறை பகுதிகள் மேம்பாட்டு வாரியம் (KIADB) மூலம் நிலத்தை வாங்க வேண் டும்” என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட் டார்.

பசவராஜ் பொம்மை இந்த திட்டத்தில் தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்துக் கொண்டு இந்த திட்டம் தொடர்பாக பல் வேறு கூட்டங்களை நடத்தினார்.

மேலும், மறு ஆய்வுக் கூட்டத்திற்காக ஜூலை 15 ஆம் தேதி மலைப்பகுதிக்கு செல்வதாகவும் முதல்வர் கூறினார். 

ஆந்திராவின் கோரிக்கை என்ன?

டிசம்பர் 2020 இல், ஆந்திரப் பிரதேசத் தில் உள்ள திருமலை வெங்கடேஸ்வரா கோயில் உள்ளிட்ட கோயில்களை நிர்வகிக் கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), வேத அறிஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து, ஆய்வு செய்து உண்மையான ஹனுமன் பிறந்த இடம் என குறிப்பிட்டு அறிக்கை சமர்ப்பித்தது.

பின்னர், ஏப்ரல் 2021 இல், ஆந்திராவில் உள்ள அஞ்சனாத்ரி மலை ஹனுமான் பிறந்த இடம் என்று இந்த குழு கூறியது. திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி கே.எஸ்.ஜவஹர் ரெட்டி, அவர் களின் கருத்தை ஆதரிக்க புராண, ஜோதிட மற்றும் அறிவியல் சான்றுகள் உள்ளன என்று கூறினார். கருநாடகாவின் எதிர்க் கேள்வி என்ன?

ஹம்பிக்கு அருகில் உள்ள அஞ்ஜெயநாத்ரி மலையில் ராமாயணத்தில் இந்துக் கடவுள் ராமன் மற்றும் அவரது தம்பி லக்ஷ்மணன் ஹனுமனை சந்தித்த இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கருநாடக அமைச்சர்கள் பலர் கூறியுள்ளனர். மலை யின் உச்சியில் பாறையில் செதுக்கப்பட்ட சிலையுடன் அனுமன் கோயிலும், அருகில் ராமன், சீதா மற்றும் அஞ்சனா தேவி கோயில்களும் உள்ளன. கருநாடக அரசு இந்த மலையை ஹனுமன் ‘ஜென்மஸ்தம்’ (பிறந்த இடம்) என்ற அடையாளத்துடன் ஒரு புனித யாத்திரை மய்யத்தை உருவாக்க உள்ளது.

 திருமலை திருப்பதி தேவஸ்தானம் குழு அமைக்கப்பட்ட உடனேயே, கருநாடக சுற்றுலாத் துறையானது மலைக் கோயில் தளத்தை மேம்படுத்துவதற்கான அதன் திட்டங்களில் வேலை செய்யத் தொடங் கியது

ராமாயணக்கதையில் குரங்குப் பாத் திரமான அனுமன் கிஷ்கிந்தா என்னும் இடத்தில் பிறந்ததாக உள்ளது, இந்த கிஷ் கிந்தா ஒளிமயமிக்க சூரியனைப் போன்ற பெரிய நட்சத்திரத்தையுடைய  ஒரு உலகம் என்று கூறுகிறது, சுமேரிய நாகரிகத்தின் போது குரங்கு மனிதர்கள் வாழ்ந்த உலகம் நகரம் என்று கதைகள் கூறியுள்ளனர். அதிலும் பிரகாசமான விண்மீன் கொண்ட ஒரு உலகத்தில் குரங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக கதைகள் உள்ளன. 

அந்தக்கதையை அப்படியே ராமாய ணத்தோடு இணைத்து கிஷ்கிந்தா, சுக்ரீ வன் வாலி என்று எல்லாம் பெயர் சூட்டி விட்டனர். 

இல்லாத உலகில் கற்பனையில் படைத்த கதாபாத்திரத்தின் பிறப்பு குறித்து இரண்டு மாநிலங்கள் அடித்துக்கொள்கின்றன.

ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் ஹனுமான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

அயோத்தியில் ராமன் பிறந்தான் என்று கூறும் அதே நேரத்தில் நேபாள நாட்டு பிரதமர் ராமன் எங்கள் நாட்டில் தான் பிறந்தான். வால்மிகி ராமாயணத்தில் ராமன் பிறந்த ஊர் தொடர்பான அடையாளங்கள் அனைத்தும் எங்கள் நாட்டில் உள்ள ஒரு நகருக்குப் பொருந்துகிறது என்றார். 

ஆனால் ஒன்றிய அரசும் உத்தரப் பிரதேச அரசும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டி ராமன் கோவிலைக் கட்டு கின்றன.

 இப்போது கருநாடக அரசும் இதே போல் கோடிகளைக் கொட்டுகிறது.

No comments:

Post a Comment