வீதிக்கு வந்து போராடினால் பாசிச சக்திகள் ஓட்டம் பிடிக்கும்! சிபிஅய் (எம்.எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா உரை வீச்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 27, 2022

வீதிக்கு வந்து போராடினால் பாசிச சக்திகள் ஓட்டம் பிடிக்கும்! சிபிஅய் (எம்.எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா உரை வீச்சு

தஞ்சாவூர், ஜூலை 27 -  தஞ்சாவூரில், ஞாயிறு மாலை  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சார்பில் ‘காவிப் பாசிச எதிர்ப்பு மாநாடு’ நடைபெற்றது.  சிபிஅய் (எம்எல்) மாநிலச் செயலாளர் என்.கே.நடராஜன் தலை மை வகித்தார். 

மாவட்டச் செயலாளர் டி.கே.கண் ணையன் வரவேற்றார்.  மாநாட்டில் பங்கேற்று அக்கட்சி யின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா பேசியதாவது: பாசிச அபாயத்துக்கு எதிராக, சித்தாந்த ரீதியான இயக் கத்தை, ஒருவர் முன்னெடுக்க வேண்டும். ஒரு  அமைப்பாக இருந்தாலும், ஒரு தனி நபராக இருந்தாலும் சரி. சிலர் சிறைக்குள் இருக்கிறார்கள். சிலர் வெளியில் இருக்கிறார்கள். 

சிறைக்குள் இருந்தாலும், வெளியில் இருந்தாலும், சித்தாந்த ரீதியான எதிர்ப்பை பாசிச அபாயத்துக்கு எதிராக, ஒரு ஒன்றுபட்ட எதிர்ப்பை, ஒன்றுபட்ட விழிப்புணர்வை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இறுதியில் மக்களுக்குத்தான் அதிகாரம் என்பது உலக வரலாற்றிலே நிரூபிக் கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு இலங் கையிலே அதிபர், பிரதமர், எல்லாம் மக்கள் போராட்ட த்தின் முன்னால் மண்டியிட்டு, ஓடிக் கொண்டிருக்கக் கூடிய நிகழ்ச்சியை நாம் பார்க்கின் றோம்.  அதுபோல் இங்கே மக்கள் பலம் பெற வேண்டும். மக்கள் வீதிக்கு வரும்போது, மக்கள் போராட்டக் களத்துக்கு வரும் போது, மதவெறி  பாசிச சக்திகள் ஓட ஓட விரட்டப்படு வார்கள்.

ஷாகின்பாக் போராட்டம் அதைத் தான் நமக்கு காண்பித்தது. விவசாயப் போராட்டத்தினுடைய வெற்றி அதைத்தான் காண்பித்தது. விவசாயப் போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகு கூட, இன்றைக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான கமிட்டி ஒன்றைப் போட்டு, அந்த  வெற்றியை சீர்குலைக்கக் கூடிய,  அந்த வெற்றிக்கு துரோகம் விளை விக்கக் கூடிய, முயற்சியை இந்த ஆட்சியாளர்கள் செய்கிறார்கள். பாசி சத்திற்கு எதிராக, ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தை கட்டமைக்கத் தான் இடதுசாரிகள் உள்ளிட்டவர்கள் ஓரணியில் திரண்டிருக்கிறோம். 2024ஆம் ஆண்டு தேர்தல் மிக  முக்கியமானது. அதில் பாசிச சக்தி கள், தோற்கடிக்கப்பட வேண்டும்.  குடி யரசுத் தலைவர் தேர்தலிலே அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு வேட்பாளரை நிறுத்தினோம். குடியரசு துணைத் தலைவர் தேர் தலிலே, திரிணாமுல் காங்கிரஸ், சில சிக்கல்களை உருவாக்கியது.

1942இல் வெள்ளையனே வெளி யேறு என்ற அறைகூவல் ஆகஸ்ட் மாதம் விடப்பட்டது. 2022இல் ஆகஸ்ட் மாதத்திலே, பாசிசமே நாட்டை  விட்டு வெளியேறு. ஆர்எஸ் எஸ்சே நாட்டை விட்டு வெளியேறு; கார்ப்பரேட் மய மாக்கமே நாட்டை விட்டு வெளியேறு; சாதிய சக்திகளே, நாட்டைவிட்டு வெளி யேறு என்று, நாம் எல்லோரும்  ஒன்றாக சேர்ந்து, உரத்த குரல் கொடுப்போம்; அதற்கான தருணம் தான் இது. இவ்வாறு அவர் பேசினார். 

No comments:

Post a Comment