தி.மு.க. வழக்குரைஞரும் - தமிழ்நாடு அரசு சிறப்பு வழக்குரை ஞருமான வெ. இரவி அவர்களின் துணைவியார் திருமதி விஜயா ரவி (வயது 57) அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (30.6.2022) காலை 9.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி மறை வெய்தினார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இவருக்கு மீனாட்சி சுதர்சன் என்ற மகளும், வழக்குரைஞர் குணாளன் என்ற மகனும் உள்ளனர்.
அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி நிகழ்வுக்காக அவரது உடல் வைக்கப்பட்டு நேற்று (30.6.2022) மாலை 6.00 மணியளவில் இறுதி ஊர்வலம் புறப்பட்டு, சென்னை , என்.எஸ்.கே.நகர் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
குறிப்பு: மறைவுச் செய்தியை அறிந்த தமிழர் தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்குரைஞர் வெ. இரவி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
No comments:
Post a Comment