தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் எத்தனை வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் எத்தனை வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டது?

மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் ஒன்றிய அரசுக்கு கேள்வி

புதுடில்லி,ஜூலை21- தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் எத்தனை வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற திமுக மாநிலங்களவை உறுப்பினரின் கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.

ஒன்றிய அரசின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாக தேசிய கிராமப் புற குடிநீர் திட்டம் கருதப்படுகிறது. 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், 2019 முதல் ஜல் சக்தி மிஷன் என்ற பெயரில் அழைக்கப் படுகிறது. 

நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் அடுத்த ஆண்டுக்குள் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினர் வழக்குரைஞர் பி. வில்சன், ஒன்றிய நீர் சக்தித் துறைக்கு முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.

அதில், இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என கேட்டிருந்தார். இதற்கு ஒன்றிய நீர் சக்தித் துறை அமைச்சர் பிரஹலாத் சிங் பாட்டீல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், 2009_-2010 நிதி ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு இத்திட்டத் திற்காக ஒதுக்கிய நிதி குறித்தும், அதில் மாநிலங்கள் செலவிட்ட நிதி குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டிற்கு ஆண்டு தோறும் ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும், செலவிடப்பட்ட நிதி குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2019-_2020 நிதி ஆண்டில் தமிழ் நாட்டிற்கு ஒன்றிய அரசு இத்திட்டத் திற்காக ரூ. 373.87 கோடியை ஒதுக்கி உள்ளது. இதில், தமிழ்நாடு அரசு 373.10 கோடியை செலவிட்டுள்ளது.

இதற்கு அடுத்த நிதி ஆண்டில் ஒன்றிய அரசு 921.99 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. அதில், ரூ.690.36 கோடியை தமிழ்நாடு அரசு செல விட்டுள்ளது. கடந்த 2021_-2022 நிதி ஆண்டில் ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி ரூ.3,091.21 கோடி. இதில் மாநில அரசு செலவிட்ட நிதி ரூ. 614.35 கோடி. இவ்வாறு ஒன்றிய நீர் சக்தித் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.


No comments:

Post a Comment