பிரதமரைப் புறக்கணித்தார் தெலங்கானா முதலமைச்சர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 3, 2022

பிரதமரைப் புறக்கணித்தார் தெலங்கானா முதலமைச்சர்

அய்தராபாத், ஜூலை 3- தெலங்கானா மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் போதெல்லாம் அவரை வரவேற்பதை அம்மாநில முதலமைச்சர் கே. சந்திர சேகர் ராவ் தவிர்த்து வரு கிறார். அந்த வகையில், கடந்த 6 மாதங்களில் 

3- ஆவது முறையாக சனிக்கிழமையன்றும் மோடியின் வருகையை கே.சி. சந்திரசேகரராவ் புறக்கணித்துள்ளார். அதேநேரம், பிரதமர் மோடி  வரும் அதே விமான நிலையத்திற்கு எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சனிக்கிழமை யன்று  (2.7.2022) வந்த போது, அவரை விமான நிலையத்திற்கே நேரில் சென்று சால்வை அணி வித்து வரவேற்றார்.

 மிகச் சிறந்த ஆளுமைகளுடன் ஆண்டுக்கு 25 நிகழ்ச்சிகளை நடத்த தமிழ்நாடு அரசு திட்டம்

சென்னை, ஜூலை 3 

மிகச் சிறந்த ஆளு மைகளை கொண்டு "TN talk" என்ற தலைப்பில் ஆண்டுக்கு 25 நிகழ்வுகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்ட மிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகை யில் இலக்கியம், பொருளாதாரம், கல்வி, தொல்லியம், மருத்துவம் அறிவியல் போன்ற பல துறைகளின் மிகச் சிறந்த ஆளுமைகளை கொண்டு "TN talk" என்ற தலைப்பில் நிகழ்ச்சிகளை நடத்த தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறை முடிவு செய்துள்ளது. இதன் விவரம் பின் வருமாறு:

அண்ணா நூற் றாண்டு நூலக ஒருங் கிணைப்பில் நவீன அரங்க அமைப்புடன் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

ஆண்டுக்கு 25 நிகழ்ச்சிகள் நடை பெறும்.

புகழ் பெற்ற கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படும்.

தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் இந்த நிகழ்வு நடை பெறும்.

நிகழ்வுக்கான அமை விடங்கள் நிகழ்வின் தன்மைக்கு ஏற்ற வகை யில் இருக்கும்

இதற்கான அட்ட வணை முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு சமூக வலைதளம் வாயிலாக பகிரப்படும்

நிகழ்வுகள் அனைத் தும் இணையம் வழியாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

முறையாக எடிட் செய்யப்பட்டு யூடியூப்பில் காட்சிப் பதிவுகள் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்தப் பணிகளை மேற்கொள்ள பொது நூலகத்துறை இயக்குநர் தலைமையில் ஒருங்கி ணைப்பு குழு அமைக் கப்படும். 

No comments:

Post a Comment