திருவனந்தபுரம், ஜூலை 25- கேரள மாநிலம், திருவனந் தபுரம் சிறிகாரியம் பகுதி யில் அமைந்துள்ள சி.இ. டி. பொறியியல் கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது. அங் குள்ள நிழற்குடை இருக் கையில் பொறியியல் கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் அமர்வது வழக்கம். மாணவ, மாண விகள் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது குறித்து அப்பகுதியில் உள்ள ஹிந்து அமைப் பினர் எச்சரித்தனர், கலாச்சரப் பாடம் எடுத் தனர்.
இந்த நிலையில் அங் குள்ள மேலும் சில ஹிந்து அமைப்புகள் சேர்ந்து பேருந்து நிழற்குடையில் உள்ள இருக்கைகளை அகற்றினர்.
இதனை எதிர்த்த போது நகர நிர்வாகத்தால் புதிதாக இடைவெளி விட்டு 3 தனித் தனி இருக் கைகள் அமைக்கப்பட் டது. இது கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற் படுத்தியது. இதையடுத்து பேருந்து நிழற்குடைக்குச் சென்ற மாணவ, மாணவி கள் ஒருவர் மடியில் ஒரு வர் அமர்ந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட் டனர்.
மாணவர்கள் மடியில் மாணவிகளும், மாணவி கள் மடியில் மாணவர்க ளும் அமர்ந்து ஒளிப் படம் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைர லாக பரவ, விஷயத்தை கேள்விபட்ட திருவனந்த புரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் நிகழ்வு இடத்துக்குச் சென்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
அதோடு மட்டுமல்லா மல், வைஃபை வசதியுடன் இங்கு புதிய பேருந்து நிழற்குடை அமைக்கப் படும் என்றும் அது ஆண், பெண் சமத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்கும் என் றும் உறுதி அளித்தார். ஆர்யா ராஜேந்திரன் தன் 21ஆவது வயதில் மேய ராக தேர்வானார். நாட் டின் மிக இளம் வயது மேயர் என்ற பெருமையை பெற்றவர். இவருக்கு அடுத்த மாதம்தான் திருமணம் நடைபெற உள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே ஆடை குறித்து சர்ச்சையை இங் குள்ள ஹிந்து அமைப்பு கள் ஏற்படுத்தியதையடுத்து இருபால் மாணவர்களும் ஒரே மாதிரி சீருடை ஆடைகள் அணிந்துவந்து பாலின பேதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலை யில் மீண்டும் அங்கு மாணவர்கள் பாலின ரீதியில் எங்களைப் பிரிக்க வேண்டாம் என்று எடுத் துக் காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment