கன்னியாகுமரி மாவட்ட கழக இளைஞரணி சார்பாக மாநில மாநாட்டிற்கான துண்டறிக் கைகளை நாகர்கோவில் மாநகரில் கடைவீதிகளில் பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை மேற்கொண்டனர். குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில், மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் தாஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ்,தொழிலாளரணி அமைப்பாளர் கருணாநிதி, மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் இரா.கோகுல், தோழர்கள் குமரிச் செல்வன், ச.ச.மணி மேகலை, சியாமளா, உள்பட பலரும் கலந்து கொண்டனர் . குமரிமாவட்டம் முழுமையாக கழக தோழர்கள் மாநில மாநாட்டிற்கான பரப்புரைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment