சென்னை, ஜூலை 3 "உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தென்னிந்தியாவில் முதன்முறையாக பின்னோக்கி நடந்து செல்லும் மாரத்தான் போட்டி,சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த போட்டியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசுகையில்,
பிளாஸ்டிக் எந்தளவுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதை மக்கள் உணர்ந்தால், அதை பயன்படுத்த மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மஞ்சள்பை குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment