பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க. சண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழா பொத்தனூர் ஆர்.கே. திருமண மண்டபத்தில் நேற்று 3.7.2022 நடைபெற்றது. இரண்டாம் அமர்வு மாலை நிகழ்விற்கு திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையேற்று உரையாற்றினார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விழா நாயகருக்கு பொன்னாடை அணிவித்து வெள்ளி தட்டை பரிசு அளித்து நிறைவுரையாற்றினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை. சந்திரசேகரன், வீ. அன்புராஜ், இரா. ஜெயக்குமார், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, அமைப்புச் செயலாளர்கள் ஊமை. ஜெயராமன், ஈரோடு சண்முகம், வி. பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி தலைவர் பேராசிரியர் முனைவர் ப. காளிமுத்து அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
மாநில மகளிரணி பாசறைத் தலைவர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி, பொதுக்குழு உறுப்பினர் பழநி. புள்ளையண்ணன், காங்கிரஸ் கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வக்குமார், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சித்திக், சேலம் மண்டலத் தலைவர் சிந்தாமணியூர் சுப்ரமணியன், நாமக்கல் மாவட்டத் தலைவர் குமார், செயலாளர் பெரியசாமி, கரூர் மாவட்டத் தலைவர் குமாரசாமி மற்றும் மண்டலத் தலைவர்கள், மண்டலச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழகத் தோழர்கள் இவ்விழாவில் பெருந் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர். முன்னதாக ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டப் பகுத்தறிவாளர் கழக தலைவர் வழக்குரைஞர்
ப. இளங்கோ நிகழ்வை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.
No comments:
Post a Comment