சென்னை, ஜூலை 28 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாண வர்கள் எண்ணிக்கை அதிகரித் துள்ள நிலையில் அதற்கு ஏற்ற வாறு ஆசிரியர்களின் எண்ணிக் கையை உயர்த்த சுமார் 900 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. தனியார் பள்ளிகள் அதிகரிப்பு, ஆங்கில வழிக் கல்வி மீதான ஈர்ப்பு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநக ராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து, மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 83 ஆயிரம் வரை வந்துவிட்டது. அதற்கு ஏற்றவாறு ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைக்கப் பட்டது.
இந்நிலையில் கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாக பல்லாயிரக்கணக் கான குடும்பங்கள் வாழ்வா தாரத்தை இழந்ததால், கல்விக் கட்டணத்தை செலுத்த முடி யாமல், தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளை சென்னை மாநகராட்சி பள்ளி களில் சேர்க்கத் தொடங்கியுள்ளனர் இதன் காரணமாக மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர் களின் எண்ணிக்கை 2020- - 2021 கல்வியாண்டில் ஒரு லட்சத்தை கடந்தது.
கடந்த 2010-- 2011 கல்வி யாண்டில் மாணவர்களின் எண் ணிக்கை 1 லட்சத்து 320 ஆக இருந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
இந்த ஆண்டு ஒரு லட்சத்து 7 ஆயிரமாக மாணவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.
இதற்கு ஏற்றவாறு ஆசிரியர் களின் எண்ணிக்கையை உயர்த்த மாநகராட்சி திட்ட மிட்டிருந்தது.
அது தொடர்பான ஆலோச னைக் கூட்டமும் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது.
அதில் மாநகராட்சி பள்ளிகளில் தற்போது உள்ள மாணவர்களுக்கு ஏற்றவாறு எவ்வளவு ஆசிரியர்கள் தேவை என ஆலோசிக்கப்
பட்டது. அதன் படி, 900 ஆசிரி யர்கள் தேவை என்பது தெரிய வந்தது.
இந்த ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிப்பது என வும், இது தொடர்பாக மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் ஒப்புதல் அடிப்படையிலேயே இந்த ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment