ஏகாம்பரநாதர் கோயில் சிலை முறைகேடு வழக்கு: காவல்துறை விசாரணைக்கு மாற்றம்-90 நாட்களுக்குள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 25, 2022

ஏகாம்பரநாதர் கோயில் சிலை முறைகேடு வழக்கு: காவல்துறை விசாரணைக்கு மாற்றம்-90 நாட்களுக்குள்

விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவுசென்னை, ஜூலை.25- காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயிலுக்கு தங் கத்தில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை சிலை கடத்தல் தடுப்புபிரிவில் இருந்து சிவகாஞ்சி காவல்துறைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சிவன், பார் வதி, முருகன்ஆகியோர் சேர்ந்து இருக்கும் இந்த சிலையில் ஏற்பட்ட சேதம் காரணமாக வேறு ஒரு தங்கச் சிலையை முத் தையா ஸ்தபதி வடித்து இருந்தார்.

இதற்காக 100 கிலோ தங்கம், பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களி டம் வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்த புதிய சிலையில் துளிஅளவு கூட தங்கம் இல்லை என அண்ணாமலை என்பவர் அளித்த புகாரின் அடிப் படையில் இதுதொடர் பாக சிவகாஞ்சி காவல் துறை 2018-இல் வழக்குப் பதிந்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை கடந்த 2019-ஆம் ஆண்டு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு மாற்றப் பட்டது. அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அறநிலையத் துறையின் அப்போதைய ஆணையர் வீரசண்முகமணி, திருப் பணிகளுக்கான கூடுதல் ஆணையர் கவிதா, முத் தையா ஸ்தபதி மற்றும் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 10 பேரை கைது செய்யப் பட்டு, பின்னர் பினையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்த பதி உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி ஜி.ஜெயச் சந்திரன், “சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீது நம்பிக்கை வைத்து உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ஒப்ப டைத்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை கடந்த 4 ஆண்டுகளாக நன்கொ டையாளர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்த தைத்தவிர வேறு எந்த விசாரணையும் மேற்கொள் ளாதது பெருத்த சந்தே கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்த வழக்கை மீண்டும் சிவகாஞ்சி காவல்துறையினரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறேன். இந்த வழக்கின்ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை உட னடியாக சிவகாஞ்சி காவல்துறையின் வசம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் 90 நாட்களுக் குள் விசாரணையை முடித்து காஞ்சிபுரம் நீதி மன்றத்தில் இறுதி அறிக் கையை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தர விட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

No comments:

Post a Comment