இப்படி ஒரு நெருப்பாற்றில் நீந்தி மீண்ட நாளேடு வேறு உண்டா?
சிந்திப்பீர், இளைய தலைமுறையினரே!
கி.வீரமணி, ஆசிரியர், ‘விடுதலை’
நமது ‘விடுதலை’ நாளேடு, நமது ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் - அவ்வுரிமைகளைப் பெறவும், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலையாகி, பகுத்தறிவின் பயன்பாட்டால் உலகில் போற்றத்தக்க சமுதாயமாக ஆக வேண்டும் என்பதற்காகவும், எத்த னையோ லட்சம் ரூபாய்கள், பொருள் இழப்பானாலும் கூட, சமுதாயத்திற்கும், மக்களுக்கும் அறிவிலும், மனத் திலும் லாபம் என்பதால், 88 ஆண்டுகள் எதிர்நீச்சல் போட்டு நடைபெற்றுவரும் ஓர் அதிசய நாளேடு!
ஒரு இலட்சிய, கொள்கை நாளேடு - சமூகப் புரட்சிக்கான கருத்தியல் போருக்கான பயணத்தில், இது காகிதம் அல்ல - ஆயுதம் - அறிவாயுதம் என்று உணர்த்தும் வகையில் அது சந்தித்துள்ள எதிர்ப்புகளை, அரசின் அடக்குமுறை காரணமாக விழுப்புண்களையும் ஏற்று வீறுநடை போட்டு வந்துள்ள வரலாற்றுச் சுவடுகளைப் படித்துப் பாருங்கள். அதன் அறிவுப் புரட்சி, அமைதிப் புரட்சி எப்படிப்பட்ட ‘‘விலை’’ கொடுத்து வளர்ந்து வந்திருக்கிறது என்பது புரியும்.
விளையாட்டுக்காக அல்ல இந்த வீர நாளேடு -
வினையாற்றி சமூகத்தை மாற்றுவதற்காகவே!
அனைவரும் சமம், சமத்துவ, சம வாய்ப்பே அதன் இலக்கு; சமூகநீதி - அதனை அடைய வழி மானமும், அறிவும் பெற்ற மனிதர்களாக மக்களை உருவாக்குதல் என்பதே அதன் குறிக்கோள்.
சமூக, பொருளாதார, அரசியல் பண்பாட்டு விழிப்புணர்வு, மீள் பார்வை, மீட்டெடுக்கவே அதன் பயனுறு பயணம் என்பதைத் தொடங்குகையில் எவ்வளவு சங்கடங்களை, அடக்குமுறை அம்புகளை அதுவும் அந்நாளைய பிரிட்டிஷ் அரசிடமிருந்தும், அது எப்படி சந்தித்து மீண்டுள்ளது என்பதைப் புரிய பழைய நிகழ்வுகளை இங்கே தொகுத்து அளிக்கும் தொடர் இது!
படித்து அறிக, அறிந்து ஆதரவு தருக!
1935 ஆம் ஆண்டுக்குச் செல்வோமா?
அதன் தொடக்கத்திலேயே எப்படிப்பட்ட எதிர்நீச்சல், சோதனை, வழக்கு, தண்டனை, சிறைவாசம் அதன் ஆசிரியர், வெளியிடுவோருக்கு!
இதயத்தைத் தாக்கும் செய்திகள் - தகவல்கள் அல்லவா இவை?
வலிக்குமே என்று அஞ்சிக் கொண்டு இருக்காமல் ஒரு மருத்துவர் எப்படி உங்களுக்கு ஊசி போடுகிறாரோ, தேவைப்பட்டால் எப்படி அறுவைச் சிகிச்சை செய் கிறாரோ அப்படியே நானும் அதிக உரிமை எடுத்துக் கொண்டு உங்களை எல்லாம் விமர்சிக்கிறேன் என்று எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொருவரையும் நான் அளவுகடந்து நேசிக்கிறேன். தீங்கு விளைவிக்கும் எந்தக் கிருமியும் உங்களை அண்டிவிடக்கூடாது என்பதற்காகத்தான் உங்களை எந்நேரமும் கவனித்து வருகிறேன். நாக்கில் தழும்பு ஏறும் வரை உங்களுக்காகப் பேசுவேன். கைச் சாய்ந்து கீழே தொங்கும்வரை உங்களுக்காக எழுதுவேன். கால்கள் துவளும்வரை உங்கள் பட்டித்தொட்டிகளில் எல்லாம் நடப்பேன். எனக்கு உண்மை என்று பட்டதை நான் நம்புவதைப் போல், நீங்கள் உங்களுக்கு உண்மை என்று பட்டதை நம்புங்கள். அந்த உண்மையைப் பாதுகாக்கப் போராடுங்கள். அது ஒன்று போதும்" என மிக விரிவாகத் தமது இதழியல் நோக்கத் தைத் தமது நிலைப்பாட்டைப் பதிவிட்டுள்ளார்.
போர்க்களத்திலே நிற்கும் கட்டளைத்தளபதிகள் மட்டுமே தமது போர் வீரர்களை ஊக்கப்படுத்தத் தொடர்ந்து தம்மைச் சுயபரிசோதனை செய்து கொண் டும், புதிய புதிய அணுகுமுறைகளைத் திட்டமிட்டும் தமது தொடர் புதிய செயற்பாடுகளை வடிவமைத்து வந்துள்ளனர். அது போலத்தான் தந்தை பெரியார் ஒவ் வொரு இதழிலும் தமது கொள்கையின் உறுதித்தன் மையை வெளிப்படுத்தி வாசகர்களிடம் நம்பிக்கையை உருவாக்கி உள்ளதைக் காண முடிகிறது. தமது இதழ் எதிர்கொண்டுள்ள சிக்கல்களை ஒளிவுமறைவின்றி 01.11.1925 நாளிட்ட ‘குடிஅரசு' இதழில் வாசகர்களிடம் பகிரும் பெரியார்,
"நமது குடிஅரசுப் பத்திரிகை ஆரம்பித்து ஆறு மாதங் களாகின்றது. முக்கியமாய் நமது நாட்டுக்கு சுயராஜ்யமா கிய மகாத்மாவின் நிர்மாணத் திட்டத்தை அமுலுக்குக் கொண்டுவரவும், தமிழர்களாகிய தீண்டாதார் முதலியோரு டைய முன்னேற்றத்துக்கென்று உழைக் கவுமே ஏற்படுத் தப்பட்டது. இத்தொண்டில் குடிஅரசு சிறிதுங் கள்ளங்கபட மின்றி யாருடைய விருப்பு வெறுப்பையும் பொருட்படுத் தாது தனது ஆத்மாவையே படம்பிடித்தாற் போல் தைரி யமாய் வெளிப்படுத்தித் தொண்டுசெய்து வந்திருக்கின்றது - வரவும் உத் தேசித்திருக்கிறது. ‘குடிஅரசு' குறிப்பிட்ட கருத்தைக் கொண்ட பிரசாரப் பத்திரிகையேயல்லாமல், வெறும் வர்த்தமானப் பத்திரிகை அல்லவாதலால், வியாபார முறையையோ பொருள் சம்பாதிப்பதையோ தனது சுயவாழ்வுக்கு ஓர் தொழிலாகக் கருதியோ சுயநலத்திற் காக கீர்த்திபெற வேண்டுமென்பதையோ ஆதாரமாய்க் கொள்ளாமலும் வாசகர்களுக்குப் போலி ஊக்கமும் பொய்யான உற்சாகமும் உண்டாகும்படியாக வீணாய் கண்டகண்ட விஷயங்களையெல்லாம் கூலிக்கு எழுதச் செய்வித்தும், குறிப்பிட்ட அபிப்பிராயமில்லாமல் சமயத்திற்கேற்றாற்போல் ஜனங்களின் மனதைக் கலங்கச் செய்து வருவதுமான பொறுப்பில்லாத ஓர் வேடிக்கைப் பத்திரிகையுமன்று. பிரதி வாரமும் ‘குடிஅரசு' ஆத்மாவை வெளிப்படுத்தும்போது கண்ணீர் சொட்டா மலிருக்க முடிவதேயில்லை. இதன்பலனாக உயர்ந்தோ ரென்று சொல்லிக் கொள்ளுவோராகிய பிராமணர் முதலிய சமூகத்தாருக்கும், ராஜீயத் தலைவர்களென்று சொல்லிக் கொள்ளுவோர் களாகிய பல ராஜதந்திரிகளுக் கும் விரோதியாகவும் அவர்களுடைய சூழ்ச்சிப் பிரசாரங் களுக்கு நமது ‘குடிஅரசு' ஆளாக வேண்டியதாகவும் ஏற்பட்டிருக்கிறது" (‘குடிஅரசு',01.11.1925) என உள்ளது உள்ளபடியே எழுதியுள்ளார்.
தனது இதழியல் முயற்சியும், கொள்கையும் வெற்றிய டைய வேண்டுமென மக்களிடம் நிதிகேட்டு வாசகர்களுக்கு எவ்வித நெருக்கடியையும் பெரியார் கொடுத்ததில்லை . அதனைத் தமது இதழில் குறிப்பிடும் பெரியார்,
"அதுவும் குடிஅரசு'வின் கொள்கைக்கு குடி அரசுவைவிட வேறு உதவிப் பத்திரிகை இல்லை என்கின்ற நிலையில் தன்னந்தனியாக இருந்து இவ்வளவு காரியமும் செய்துவந்திருக்கிறது. இவ்வளவு காரியத்துக்கும் ‘குடிஅரசு' ஆனது இந்த 11 வருஷகாலமாய் எவ்வளவோ கஷ்டமும் பொருளாதார நஷ்டமும் அடைந்து வந்திருந்தாலும், ஒரு ஒத்தை சல்லியாவது பொதுஜனங்களிடமிருந்து வரியோ, உதவித்தொகையோ கேட்காமலும் எதிர்பாராமலும் இருந்து கொண்டே இந்தக் காரியங்களை செய்து வந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ளுகிறோம். இவ்வளவு பெரிய காரியங்கள் ‘குடிஅரசு' பத்திரிகை செய்வதற்கும் அதன் கொள்கைகளைப் பரப்ப பிரசாரத்துக் கும் உதவிசெய்து வந்த தோழர்கள் சிலர் உண்டு என்பதோடு அதனை ஆதரித்து வந்த வாசகர்களையும் நாம் மறந்து விடவில்லை. அவர்களுக்கு குடிஅரசு நன்றி செலுத்தக் கடமைப்பட்டதேயாகும்" (‘குடிஅரசு', 16.08.1936) என்கிறார்.
தாம் மேற்கொண்ட இதழியல் பணிக்கு உற்ற துணையாக வாசகர்களிடம் தந்தை பெரியார் ஒளிவுமறைவின்றி இதழ்களின் வளர்ச்சி குறித்து உரையாடினார். அன்றைய இதழ்கள் குறித்தும் தமது கொள்கை குறித்தும் எவ்வித ஊசலாட்டமும் இல்லாமல் தம்முடைய நிலையில் எவ்விதத் தொய்வுமின்றித் தமது இதழ்ப்பணியை இடைவிடாது பெரியார் தொடர்ந்திருப்பதனைக் காணமுடிகிறது. அவர் சந்தா சேர்ப்பதில் உடல்நலத்தில் எத்தகைய இடர்ப்பாடுகளை எதிர் கொண்டார் என்பதனை 05.05.1929 நாளிட்ட ‘குடிஅரசு' தலையங்கத்திலிருந்து அறியமுடிகிறது. அத்தலையங்கத்தின் ஒரு பகுதி,
- தொடரும்
No comments:
Post a Comment