பள்ளிகளுக்கு 77 வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 25, 2022

பள்ளிகளுக்கு 77 வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

சென்னை, ஜூலை 25- மாணவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய 77 வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக் கையாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் பள்ளி தொடங்கு வதற்கு முன்னரே பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்கள் தங்களுக் குள் அடித்துக்கொள்வது, ஆசிரி யர்கள் மோதல், பாலியல் வன் முறை, சத்துணவில் பல்லி விழுதல் என பள்ளியில் எந்த நிகழ்வு நடந் தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலரின் நேரடி கவனத் துக்கு கொண்டு வரவேண்டும். பள் ளிக்கு உள்ளூர் விடுமுறை விடும் போது முதன்மை கல்வி அலுவல ருக்கு அலைபேசி மற்றும் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். 0, 12ஆம் வகுப்பு ஆசிரியர்கள் சரி யாக பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்தியிருக்கிறார்களா? என்பதை தலைமை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும். 

அரசு பள்ளியில் தீத்தடுப்பு சாதனம் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். மாணவர் களுக்கு அவர்களின் மனதை பாதிக்கும் வண்ணம் எந்தவித தண்டனையும் வழங்கக்கூடாது. ஆசிரியர்கள் பள்ளியில் வகுப் பறையில் அலைபேசியில் பேசு வதை தவிர்க்க வேண்டும். ஆய்வின் போது அலைபேசி பேசிக்கொண் டிருக்கும் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி யிலும் படிக்கும் மாணவர்களை எக்காரணத்தை கொண்டும் ஆசிரியர்கள் தன்னுடைய சொந்த வேலைக்காக வெளியில் அனுப்பக் கூடாது. மாணவர்கள் அலைபே சியை பள்ளிக்கு கொண்டு வருவதை முழுவதுமாக தவிர்க்கவேண் டும். 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்துக்குள் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா நடத்தி முடிக்கப்பட வேண்டும். சினிமா பாட்டுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு மோதிரம், செயின் போன்றவை களை கண்டிப்பாக அணிந்து வரக் கூடாது. மாணவர்கள் அவற்றை அணிந்து கொண்டு வந்தால், பெற் றோரை அழைத்து வரச்சொல்லி விவரத்தை தெரிவிக்க வேண்டும். இது போன்று 77 வழிகாட்டு நெறி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment