கடன்பட்டு வட்டி கொடுத்த மக்களுடையவும், பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களுடையவும் மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய அப்பணங்களைக் கோவில் கட்ட, வாகனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாதிகளை வைத்து உற்சவம், வாண வேடிக்கை செய்யப் பாழ் பண்ணப்படுமானால் யார் சகித்துக் கொண்டு இருக்க முடியும்? இந்த அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்? அப்படியும் ஒரு கடவுள் இருக்கிறது என்று சொல்லப்படுமானால் அப்படிப்பட்ட கடவுளை அழித்து ஒழித்து விடுவதில் யாருக்கு என்ன நட்டம் வரும்?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment