மோடி அரசின் கைங்கர்யம் : நூல் விலை ஏற்றத்தால் 70% உற்பத்தி முடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 27, 2022

மோடி அரசின் கைங்கர்யம் : நூல் விலை ஏற்றத்தால் 70% உற்பத்தி முடக்கம்

திருப்பூர், ஜூலை 27- இந்தியாவின் பின்னலாடை தலை நகரமாகத் திகழும் திருப்பூரில் தொழிலாளர் களுக்கு வேலை இல்லை. கடந்த நவம்பர் மாதம் தொடங்கி ஆறேழு மாதங்களாக நூல் விலை கடுமை யாக உயர்ந்து வந்தது. தற்போது நூல் விலை இறங்கு முகமாக உள்ள போதும் பின்னலாடை உற்பத்தி முடங்கியுள்ளது. இதனால் மிகப் பெரும்பான்மையான தொழிலா ளர்களுக்கு வேலை இல்லை. காரணம் என்ன? மிகப்பெரும் நிறுவனங்களில் இருந்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வரை எல்லா நிலைகளிலும் வேலை வாய்ப்பு கடுமையாக சுருங்கிப் போயுள்ளது. அதேபோல் ஏற்றுமதி ஆடை உற்பத்தியும், உள்நாட்டு சந் தைக்கான உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூல் விலை உயர்வு பிரதான காரணமாக சொல்லப்பட்டாலும் கூட, வெளி நாட்டு சந்தையிலும், உள்நாட்டு சந்தையிலும் மக்களின் வாங்கும் சக்தி கடுமையாக சரிந்து போயுள் ளதால், இங்கிருந்து உற்பத்தி செய்து அனுப்பப்பட்ட ஆடைகள் விற்பனையாகாமல் தேங்கிப் போயிருப்பதாக இந்த தொழில் துறை யினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் புதிய ஆடை உற்பத்திக்கு தொழில் துறையினர் தயாராக இல்லை. எனவேதான் ஆலைகள் உற்பத்தி சுருங்கி, தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக் கப்பட்டு உள்ளது.

கடந்த காலங்களிலும் இது போல் சந்தையில் ஆடைகள் விற் பனை ஆகாமல் தேங்குவதும், இங்கு உற்பத்தி குறை வதும், தொழிலாளர் வேலை வாய்ப்பு  பாதிக்கப்படுவதும் நடந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் இப்போது ஏற் பட்டிருக்கும் நிலை, கடந்த காலத்தை விட  மிகவும் கடுமையானதாக உள்ளது என்று திருப்பூரில் நீண்ட காலம் தொழில் நடத்தி வரக்கூடிய உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். 

நூல் விலை உயர்வால் இழுபறி

ஏற்றுமதி நிறுவனங்களைப் பொறுத்த வரை புதிய ஆடைகள் தயாரித்துக்  கொடுப்பதற்கு வெளி நாட்டு வர்த்தகர்கள் தொடர் விசா ரணை மேற்கொண்டிருக்கின்றனர். எனினும் விலை நிர்ணயிப்பது பிரச் சினையாக உள்ளது. உயர்ந்திருக்கும் நூல் விலைக்கு ஏற்பத்தான் ஆடை விலையை நிர்ணயிக்க வேண்டிய நிலையில் உற்பத்தியாளர்கள் இருக் கின்றனர். ஆனால் நூல் விலை குறைந்து வருவதை சுட்டிக்காட்டி,  ஆடை விலையை குறைத்து நிர்ண யிக்க வேண்டும் என வெளிநாட்டு வர்த்தகர்கள் கேட்கின்றனர். இந்த இழுபறி நிலை காரணமாக புதிய ஆர்டர்கள் பெற முடியவில்லை என்று  ஏற்றுமதியாளர்கள் கூறுகின் றனர். மேலும் நூல்  விலை ஏற்ற, இறக்கம் என்பது உங்கள் உள்நாட்டு பிரச்சினை. எங்களைப் பொறுத்த வரை நாங்கள் கேட்கும் விலையில் கொடுத்தால் புதிய ஆர்டர் தரத் தயார், இல்லாவிட்டால் நாங்கள் வேறு பக்கம் பார்த்துக் கொள்கிறோம் என்று வெளிநாட்டு வர்த்த கர்கள் பேரம் பேசுவதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். இந்த சூழ்நிலையில் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டுமே ஆர்டர்களைப் பெற முடிகிறது. சிறு, குறு ஏற்றுமதி நிறுவனங்கள் ஆர்டர்களைப் பெற முடியாமல் திண்டாடி வருகின்றன. இதன் தொடர்ச்சியாகத்தான் தொழி லாளர்களுக்கும் வேலை தர முடியவில்லை என்று அவர்கள் கூறினர். 

70 சதவிகிதம் உற்பத்தி முடக்கம்

திருப்பூரின் உற்பத்தியில் ஏறத் தாழ 70 சதவிகிதம் உற்பத்தி தற் போது நடக்கவில்லை. 25 முதல் 30 சதவிகிதம் உற்பத்தி மட்டுமே நடக் கிறது. இதன் நேரடி விளைவுதான் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை.  திருப்பூர் மக்கள் தொகையின் பிரதான பிரி வாக இருக்கும் உழைப்பாளர்களுக்கு வேலையும், வருமானமும் இல்லாத நிலை யில் அதன் தாக்கம் சமூகத்தின் அனைத்து  பிரிவுகளிலும் பிரதிபலிக் கிறது. உதாரணத்திற்கு தொழி லாளர்கள் பிரதான உணவான அரிசி 25 கிலோ சிப்பமாக வாங்கி வைத்துக் கொண்டு வாரத் தவ ணையில் பணம் செலுத்துவார்கள். வீடுதோறும் அரிசி விற்பனை செய் யும் வியாபாரி ஒருவர் கூறுகையில், வாரந்தோறும் ஏறத்தாழ ரூ.1 லட்சம் வசூலாகும். ஆனால் இந்த வாரம் எனக்கு ரூ.45 ஆயிரம்தான் வசூலானது என்று தெரிவித்தார். திருப்பூரில் பெரும்பாலான குடும் பங்களில் கணவன், மனைவி மற்றும் வயது வந்த பிள்ளைகள் கூட்டாக உழைத்துத்தான் வாழ்ந்து வரும் நிலை உள்ளது. இப்போதைய நிலையில் ஒரு குடும்பத்தில் அனை வருக்கும் வேலை முழுமையாக கிடைப்பதில்லை.  

வசந்த காலத்தை 

அழித்த பாஜக அரசு

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கு வந்திருந்த ஒன்றிய ஜவுளி, வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் வளர்ச்சியின் எடுத்துக் காட்டாக திருப்பூரை பாருங்கள் என படாடோபமாகப் பேசினார். ஆனால் பாஜக அரசின் அடுத்தடுத்த கொள்கைகள் இந்த நகரை  நிலை குலையச் செய்து பழைய வசந்த காலத்தில் இருந்து இருண்ட காலத்தை நோக்கித் தள்ளிவிட்டது. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, நூல் விலை உள்ளிட்ட மூலப்பொருட் கள், உதிரிப் பாகங்கள் விலை உயர்வு, ஒட்டுமொத்த உள்நாட்டு சந்தை வீழ்ச்சி, மக்களின் வாங்கும் சக்தி சரிந்தது என எல்லாமாக சேர்ந்து திருப்பூரைக் கேள்விக் குறி யாக்கி விட்டது. அதன் நடைமுறை அனுபவத்தைத்தான் மிகப்பெரும் பான்மை உழைக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment