சென்னை, ஜூலை.4 பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடு பவர்கள், திருட்டு, சங்கிலி பறிப்பு, சைபர் குற்றம், போதைப் பொருட்கள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இவர்கள் மீது கட்சி பேதமின்றி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடு பவர்கள் மீது ஒன்றுக்கு அதிகமான வழக்குகள் இருந்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர்.
சென்னையில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல், ஜூலை 1 வரை (6 மாதத்தில்) பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 180 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 9 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட்டனர். மேலும், நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறிய 10 பேர் உட்பட 199 பேர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment