சென்னை, ஜூலை 3 திராவிடர் கழக வட சென்னை மாவட்ட இளைஞரணி சார்பாக நேற்று ( 02.07.2022 ) மாலை 7 மணி முதல் 9 மணி வரை எருக்கமாநகர் முத்தமிழ் நகர் மார்க்கெட் பகுதியில் ஜூலை 30 அன்று அரியலூரில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக மாநில மாநாட்டினை முன்னிட்டு கடை வீதிப் பிரச்சாரத்தினை வட சென்னை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வ.தமிழ்ச் செல்வன் தலைமையில் சென்னை மண்டல திராவிடர் கழக செயலாளர் தே.செ.கோபால் தொடங்கி வைத்தார்.
இதில் திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், வட சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் இரா.சதீசு , வட சென்னை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சு.அரவிந்த குமார், சென்னை மணடல திராவிட மாணவர் கழக செயலாளர் சு. தமிழ்ச்செல்வன், வட சென்னை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பா.பார்த்தீபன், வட சென்னை மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் வ.கலைச் செல்வன், அமைந்த கரை அருள்தாஸ் ஆகியோர் கடை வீதிப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment